/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குளிரின் தாக்கத்தால் பாதிப்பு பமூலில் பால் உற்பத்தி குறைவு
/
குளிரின் தாக்கத்தால் பாதிப்பு பமூலில் பால் உற்பத்தி குறைவு
குளிரின் தாக்கத்தால் பாதிப்பு பமூலில் பால் உற்பத்தி குறைவு
குளிரின் தாக்கத்தால் பாதிப்பு பமூலில் பால் உற்பத்தி குறைவு
ADDED : பிப் 08, 2025 06:32 AM
பெங்களூரு: கடுங்குளிர் நிலவுவதால், பமூல் எனும் பெங்களூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பால் உற்பத்தி குறைந்துள்ளது.
இதற்கு முன்பு பமூலுக்கு, பால் உற்பத்தியாளர்கள் சராசரியாக தினமும் 17 லட்சம் லிட்டர் பால் வினியோகித்தனர்.
ஆனால் சில வாரங்களாக இந்த அளவு 14.5 லட்சம் லிட்டராக குறைந்தது. குளிர் அதிகரித்ததே இதற்கு காரணம் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, பமூல் தலைவர் ராஜகுமார் கூறியதாவது:
பசுமை தீவனம் அதிகம் கிடைத்தால், பசுக்கள் அதிகமாக பால் சுரக்கும். தற்போது குளிர்காலம் என்பதால், பசுக்கள் அதிக பால் கொடுக்காது.
எனவே பால் உற்பத்தி குறைந்துள்ளது. குளிர்காலம் முடியும் வரை, இதே சூழ்நிலை இருக்கும். பால் உற்பத்தி மேலும் குறையவும் வாய்ப்புள்ளது.
பசுக்கள் கன்று போடும் காலமான, ஆகஸ்ட், செப்டம்பரில் பமூலுக்கு தினமும் 17 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் கிடைக்கும். அந்த நேரத்தில் பசுமை தீவனமும் அதிகம் கிடைக்கும்.
பெங்களூரில் தினமும் 10 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. இரண்டு லட்சம் லிட்டர் பால், தயிராக்கப்படுகிறது. ஒரு லட்சம் லிட்டர் பால், க்ஷிரபாக்யா திட்டத்துக்கு வினியோகிக்கப்படுகிறது.
மிச்சமுள்ள பாலில், பவுடர் மற்றும் சீஸ் தயாரிக்கப்படுகிறது. விவசாயிகள் எவ்வளவு பால் வினியோகித்தாலும், அதை வாங்கி பவுடராக்கி சேகரிக்கப்படுகிறது.
ஆனால் மார்க்கெட்டில், பால் பவுடரை விட சீஸ் அதிகம் விற்பனையாகிறது. எனவே சீஸ் உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.
பால் உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைகிறது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1.2 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் இருந்தனர். இவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.