/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குரங்கு காய்ச்சலை கண்டறிய சிர்சியில் மற்றொரு ஆய்வகம் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
/
குரங்கு காய்ச்சலை கண்டறிய சிர்சியில் மற்றொரு ஆய்வகம் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
குரங்கு காய்ச்சலை கண்டறிய சிர்சியில் மற்றொரு ஆய்வகம் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
குரங்கு காய்ச்சலை கண்டறிய சிர்சியில் மற்றொரு ஆய்வகம் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
ADDED : டிச 26, 2025 06:44 AM

பெங்களூரு: மலைப்பகுதி மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் பரவுவதால், சிர்சியில் மற்றொரு ஆய்வகம் திறக்க கர்நாடக சுகாதார துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
ஆண்டு தோறும் அக்டோபர் முதல் ஜூன் வரை, சிக்கமகளூரு, உடுப்பி, ஷிவமொக்கா, உத்தரகன்னடா மலைப்பகுதி மாவட்டங்களில், குரங்கு காய்ச்சல் பரவும். எனவே, நோய் பரவாமல் தடுக்க, சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படுகிறது.
ஷிவமொக்கா மாவட்டத்தில் 1,163 பேர், சிக்கமகளூரில் 124, உடுப்பியில் 12, உத்தரகன்னடாவில், 368 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 13 பேருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. முந்தைய ஆண்டு இந்த காய்ச்சலுக்கு எட்டு பேர் பலியாகினர்.
நடப்பாண்டு ஒருவரும் இறக்கக்கூடாது என்பது, எங்களின் நோக்கமாகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திட்டம் வகுத்தோம். உயிரிழப்பை தடுத்தோம்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை இறந்த, 87 குரங்குகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எந்த குரங்குக்கும் நோயின் பாதிப்பு இருக்கவில்லை. ஷிவமொக்காவில், 12 பேருக்கு குரங்கு காய்ச்சல் உள்ளது. இதில், 10 பேர் ஒரே கிராமவாசிகள். சிக்கமகளூரில் ஒருவருக்கு காய்ச்சல் பாதித்துள்ளது. அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடுவது குறித்து, மத்திய அரசுடன் பேசி வருகிறோம். புதிய தடுப்பூசி குறித்த ஆய்வும் நடக்கிறது. 2026 க்குள் தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கும்.
குரங்கு காய்ச்சல் பாதிப்பை கண்டறிய ஷிவமொக்காவில் ஒரு ஆய்வகம் உள்ளது. உத்தரகன்னடாவின் சிர்சியிலும், மற்றொரு ஆய்வகம் திறக்க தயாராகி வருகிறோம். இதனால், நோயை விரைந்து கண்டுபிடித்து, சிகிச்சை அளித்தால் உயிரிழப்பை தடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

