/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மக்களுக்கு அரசு நல திட்டங்கள்' அமைச்சர் பைரதி சுரேஷ் அறிவுரை
/
'மக்களுக்கு அரசு நல திட்டங்கள்' அமைச்சர் பைரதி சுரேஷ் அறிவுரை
'மக்களுக்கு அரசு நல திட்டங்கள்' அமைச்சர் பைரதி சுரேஷ் அறிவுரை
'மக்களுக்கு அரசு நல திட்டங்கள்' அமைச்சர் பைரதி சுரேஷ் அறிவுரை
ADDED : ஜூலை 01, 2025 03:44 AM

கோலார்: ''கர்நாடக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்ற அலட்சியம் காட்டாமல் விரைந்து முடிக்க வேண்டும்,'' என, கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார்.
கர்நாடக மாநில மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த கூட்டம், மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் தலைமையில் கோலார் ஜில்லா பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அமைச்சர் பைரதி சுரேஷ் பேசுகையில், ''கர்நாடக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் விரைந்து முடிக்க வேண்டும்.
''தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் வழிகாட்டுதலுடன் பணிகளை நிறைவேற்ற வேண்டும். நகர மேம்பாட்டுப் பணிகள், கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்ய தவற கூடாது.
அரசின் பல நலத் திட்டங்கள் கிராமப் பகுதிகளை சென்றடைய வேண்டும்,'' என்றார்.
தங்கவயல் எம்.எல்.ஏ., ரூபகலா பேசுகையில், ''தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் நடத்தும் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சிகளில் விவசாய அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அரசு நலத் திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.
''சலுகைகள், அவர்களை சென்றடைய வேண்டும். அரசு திட்டங்கள் பற்றிய விபரங்கள், விவசாயிகளை சென்றடைவதில்லை,'' என்றார்.
கோலார் மாவட்டத்தின் ஆறு தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், மாவட்ட கலெக்டர், ஜில்லா பஞ்சாயத்து தலைமை செயலர் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின், தொழிலாளர் நலத்துறையின் மொபைல் ஹெல்த் கிளினிக் வாகனத்தை, அமைச்சர் பைரதி சுரேஷ் தலைமையில், எம்.எல்.ஏ., ரூபகலா கொடியசைத்து துவக்கிவைத்தார்.