sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஓட்டுநரை தாக்கிய பெண் மீது நடவடிக்கை போலீஸ் கமிஷனருக்கு அமைச்சர் கடிதம்

/

ஓட்டுநரை தாக்கிய பெண் மீது நடவடிக்கை போலீஸ் கமிஷனருக்கு அமைச்சர் கடிதம்

ஓட்டுநரை தாக்கிய பெண் மீது நடவடிக்கை போலீஸ் கமிஷனருக்கு அமைச்சர் கடிதம்

ஓட்டுநரை தாக்கிய பெண் மீது நடவடிக்கை போலீஸ் கமிஷனருக்கு அமைச்சர் கடிதம்


ADDED : ஜூன் 15, 2025 11:29 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:'பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநரை, செருப்பால் அடித்த பெண் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கடிதம் எழுதியுள்ளதர்.

இது தொடர்பாக, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங்குக்கு, அமைச்சர் ராமலிங்கரெட்டி எழுதிய கடிதம்:

இதற்கு முன் பல முறை இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன. நானும் அன்றைய நகர போலீஸ் கமிஷனருக்கு, கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டேன். நடந்த சம்பவம் குறித்து, நகர போலீஸ் கமிஷனரை சந்தித்து, விவரிக்கும்படி கூறினேன். பல நடவடிக்கைக்கு பின்னரும், பி.எம்.டி.சி., ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

எலக்ட்ரானிக் சிட்டி அருகில், தான் கூறிய இடத்தில் பஸ்சை நிறுத்தவில்லை என்பதால், பி.எம்.டி.சி., ஓட்டுநரை பெண் பயணியொருவர், செருப்பால் அடித்துள்ளார். இந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது குறித்து, பெல்லந்துார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

சமீப நாட்களாக, பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை தாக்கி அவமதிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. சிலர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தவும் முயற்சித்துள்ளனர்.

இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும். பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநரை செருப்பால் அடித்த பெண் மீது, போலீஸ் துறை கடுமையான நவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., உட்பட, அனைத்து போக்குவரத்து கழகங்களின் நலனை பாதுகாப்பது, எங்களின் பொறுப்பு. எங்கள் துறை ஊழியர்களை தாக்குவது, அவமதிப்பதை எங்களால் சகிக்க முடியாது.

எங்கள் ஊழியர்கள் தவறு செய்திருப்பது தெரிந்தாலும், அவர்கள் மீதும் தயவு, தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us