ADDED : பிப் 13, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: அரசு மருத்துவமனைகளில், மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்ட தாக, ஊடகங்களில் செய்தி வெளியானது. எனவே சுகாதாரத்துறை அ மைச்சர் தினேஷ் குண்டுராவ், நேற்று மாலை காணொலி காட்சி மூலமாக, மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மருந்துகள் இருப்பு குறித்து தகவல் கேட்டறிந்தார்.
'எந்தெந்த மருந்துகள் பற்றாக்குறை உள்ளதோ, அவற்றை வாங்க சுவர்ண ஆரோக்கிய சுரக்ஷா டிரஸ்ட் மூலம், நிதி வழங்க வேண்டும். எந்த மருந்துகளும் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
'அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுடன், தேவையான மருத்துவ சாதனங்களும் இருக்க வேண்டும். பற்றாக்குறை இருந்தால் உடனடியாக, உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்' என, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
