UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 10:00 PM
மைசூரு: மைனர் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, மைசூரு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
மைசூரின் பிரியப்பட்டணா தாலுகா, பெட்டதபுரா கிராமத்தை சேர்ந்தவர் சாஹித் அகமது, 38. இவர், தனது 17 வயது மகளை மிரட்டி, அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த, 2024ல் சிறுமியின் தாய் அளித்த புகாரில் சாஹித் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவானது. மைசூரு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், சாஹித் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஆனந்த் ஒகாடே நேற்று தீர்ப்பு கூறினார்.
சாஹித் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளதால் அவருக்கு சாகும் வரை சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில சட்ட சேவைகள் ஆணையம் ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
