தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கலெக்டர் மீது குற்றஞ்சாட்டவில்லை: ம.ஜ.த., – எம்.எல்.ஏ., ரேவண்ணா விளக்கம்

கலெக்டர் மீது குற்றஞ்சாட்டவில்லை: ம.ஜ.த., – எம்.எல்.ஏ., ரேவண்ணா விளக்கம்

கலெக்டர் மீது குற்றஞ்சாட்டவில்லை: ம.ஜ.த., – எம்.எல்.ஏ., ரேவண்ணா விளக்கம்


UPDATED : நவ 14, 2026 12:00 AM

ADDED : நவ 13, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 12:00 AM ADDED : நவ 13, 2026 10:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாசன்: “கலெக்டர் லதாகுமாரி மீது நான் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை,” என, ம.ஜ.த., – எம்.எல்.ஏ., ரேவண்ணா கூறியுள்ளார்.

ஹாசன் மாவட்ட கலெக்டர் லதாகுமாரி. இவர், கலெக்டர் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் சிவலிங்கே கவுடா உள்ளிட்டோருக்கு 75 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியதாக, மத்திய அமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து, தலைமை செயலர் ஷாலினியிடம் ம.ஜ.த., தலைவர்கள் சமீபத்தில் புகார் அளித்தனர். கலெக்டருக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், ஹொளேநரசிபுரா தொகுதி ம.ஜ.த., – எம்.எல்.ஏ., ரேவண்ணா அளித்த பேட்டி:

கலெக்டர் லதா மீது நான் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. யாரோ சிலர் அனுப்பிய வாட்ஸாப் உரையாடல்களை வைத்தே குமாரசாமி குற்றம்சாட்டினார்.

இந்த விஷயத்தில் தடயவியல் ஆய்வு அறிக்கையை அரசு எவ்வாறு கையாளுகிறது என்பது கவனிக்கப்படுகிறது.

இதில், ஏதாவது அரசு தவறு செய்தால் சும்மா இருக்க மாட்டேன். லஞ்சம் பெறவில்லை என அமைச்சர் சிவலிங்கே கவுடா ஹாசனாம்பா கோவிலில் சத்தியம் செய்து உள்ளார்.

அவரை பற்றி பேசுவதற்கு நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாக பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us