தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பைக் – லாரி மோதல் மனைவி உயிரிழப்பு

பைக் – லாரி மோதல் மனைவி உயிரிழப்பு

பைக் – லாரி மோதல் மனைவி உயிரிழப்பு


UPDATED : நவ 14, 2026 12:00 AM

ADDED : நவ 13, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 12:00 AM ADDED : நவ 13, 2026 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெலமங்களா: மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதியின் பைக் மீது, லாரி மோதியதில் மனைவி உயிரிழந்தார். கணவர் பலத்த காயமடைந்து, மருத்து வமனையில் சிகிச்சை பெறுகிறார்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், சிக்கமதுரே பேரூராட்சியின் உத்திசிக்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் விஜய்குமார், 48. இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி லட்சுமி தேவி என்ற தேவம்மா, 42. இவர்களின் மகள் இந்திராணிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. நவம்பர் 26 மற்றும் 27ம் தேதிகளில், திருமணம் நடக்கவிருந்தது.

உறவினர்களுக்கு, மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க, தேவம்மாவும், விஜய்குமாரும் நேற்று காலை பைக்கில் சென்று கொண்டிருந்தனர். நெலமங்களாவின், மைலனஹள்ளி அருகில் செல்லும் போது, பின்னாலிருந்து அதிவேகமாக வந்த சிமென்ட் லாரி, பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த தேவம்மா, லாரி சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

விஜய்குமாரின் மீது லாரி ஏறியதில், அவரது கால் துண்டானது. அப்பகுதியினர் இவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெலமங்களா ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us