UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 10:16 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து, தங்கவயல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
தங்கவயல் தாலுகா நிர்வாக அலுவலகமான மினி விதான் சவுதா முன், ஜனதா தள தங்கவயல் கிளை சார்பில், லியோ ஜோசப் தலைமையில், பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோரிக்கை அட்டைகளை ஏந்தி, காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின், தங்கவயல் துணை தாசில்தாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
