/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெருநகர மைசூரு ஆணையம் அமைக்க ம.ஜ.த., விருப்பம்
/
பெருநகர மைசூரு ஆணையம் அமைக்க ம.ஜ.த., விருப்பம்
ADDED : மே 16, 2025 11:04 PM

மைசூரு: மைசூரின், சாமுண்டீஸ்வரி தொகுதியின் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, நேற்று அளித்த பேட்டி:
நரசிம்மராஜா, சாமராஜா, கிருஷ்ண ராஜா தொகுதிகளுடன் ஒப்பிட்டால், சாமுண்டீஸ்வரி தொகுதி பெரியதாகும். நான்கு பட்டண பஞ்சாயத்து, ஒரு நகராட்சி, 17 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
எனவே பெருநகர பெங்களூரு ஆணையம் போன்று, பெருநகர மைசூரு ஆணையம் அமைக்கும்படி முதல்வரிடமும், நகர மேம்பாட்டுத் துறை அமைச்சரிடமும் வலியுறுத்துகிறோம்.
எங்களின் வலியுறுத்தலுக்கு, சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதை பற்றி ஆய்வு செய்த பின், முடிவு செய்வதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு உட்பட்ட, ஐந்து வார்டுகளுக்கு அரசு, நகராட்சி, மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் சார்பில் நிதியுதவி பெற்று, அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.