/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடமாடும் காவிரி திட்டம் ரூ.8 லட்சம் வருவாய்
/
நடமாடும் காவிரி திட்டம் ரூ.8 லட்சம் வருவாய்
ADDED : ஜூன் 07, 2025 11:02 PM
பெங்களூரு: பெங்களூரில் கோடையில் தண்ணீர் பஞ்சத்தை பயன்படுத்தி, தனியார் டேங்கர் லாரிகள் அதிக விலைக்கு குடிநீர் விற்பனை செய்து வந்தனர்.
இதைத் தடுக்க, நடமாடும் காவிரி திட்டத்தை கடந்த மாதம் 9ம் தேதி பெங்களூரு குடிநீர் வாரியம் துவக்கியது.
இத்திட்டம் மூலம், பொது மக்கள் தங்கள் மொபைல் போனில் செயலி மூலம், தண்ணீரை ஆர்டர் செய்யலாம். இதன்பின், ஆர்டர் செய்தவரின் வீட்டுக்கே சென்று, தரமான காவிரி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
பணத்தை ஆன்லைன் மூலமே செலுத்தலாம். இத்திட்டத்திற்கு காடுகோடி, கொட்டிகெரே உட்பட பல பகுதிகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பெங்களூரு குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த மாதம் 9ம் தேதி முதல் இம்மாதம் 3ம் தேதி வரை, தண்ணீருக்காக, 885 டேங்கர் லாரிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 25 நாட்களில், குடிநீர் வாரியத்துக்கு 8,03,440 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மொத்தம் 5.79 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்ட உள்ளது.
வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், ''தனியார் டேங்கர் லாரிகளுக்கான தேவை குறைந்தால், நிலத்தடி நீர் சுரண்டலும் குறையும். அது தான் நடமாடும் காவிரி திட்டத்தின் நோக்கம். தனியார் டேங்கர்கள் கட்டணத்தை குறைத்து உள்ளது, திட்டம் வெற்றி பெற்றதை காட்டுகிறது,'' என்றார்.