தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வன விலங்குகளை காண ‘சபாரி’ செல்லும் போது மொபைல் போனுக்கு தடை

வன விலங்குகளை காண ‘சபாரி’ செல்லும் போது மொபைல் போனுக்கு தடை

வன விலங்குகளை காண ‘சபாரி’ செல்லும் போது மொபைல் போனுக்கு தடை


UPDATED : அக் 11, 2026 12:00 AM

ADDED : அக் 10, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 12:00 AM ADDED : அக் 10, 2026 09:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாம்ராஜ்நகர்: வன விலங்குகள் சபாரியில், மொபைல் போன் பயன்பாட்டுக்கு தடை விதித்து, தலைமை வன பாதுகாப்பு அதிகாரி குமார் புஷ்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:

புலிகள் சரணாலயத்தில் மொபைல் போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வன விலங்குகளை காண சபாரியில் செல்லும் போது, மொபைல் போன் பயன்படுத்த கூடாது.

இதற்கு முன் ஓட்டுநர்கள், சுற்றுலா பயணியர், கைடுகள் மொபைல் போன்களை, ஏரோபிளேன் மோடில் வைத்து, காட்சிகளை பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இப்போது மொபைல் போனுக்கு முற்றிலுமாக தடை விதித்து, தலைமை வன பாதுகாப்பு அதிகாரி குமார் புஷ்கர் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலா பயணியர், ஓட்டுநர்கள், கைடுகள் மொபைல் போன் பயன்படுத்த கூடாது. அவசர நேரத்தில் தொடர்பு கொள்ள, அனைத்து சபாரி வாகனங்களிலும், ஒயர்லெஸ் வசதி செய்யப்படும்.

பண்டிப்பூர், கே.குடி, கோபிநத்தம், பி.ஜி.பாளையா வன விலங்குகள் சரணாலயத்தில், வன விலங்குகளை காண சபாரி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us