பவன் கெராவுக்கு எம்.பி., பதவி மோகன்தாஸ் பை எதிர்ப்பு
பவன் கெராவுக்கு எம்.பி., பதவி மோகன்தாஸ் பை எதிர்ப்பு
ADDED : ஜூன் 07, 2026 11:39 PM

பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக பவன் கெராவை தேர்வு செய்ய, தொழிலதிபர் மோகன் தாஸ் பை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு எம்.பி.,யாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு பெங்களூரு தொழிலதிபர் மோகன் தாஸ் பை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் வலைதள பதிவு:
இது கண்டிப்பாக கேட்கப்பட வேண்டிய கேள்வி தான்; கன்னடர் அல்லாத, கர்நாடகாவிற்கு முற்றிலும் அந்நியரான ஒருவர் ஏன் ராஜ்யசபா எம்.பி.,யாக நிறுத்தப்படுகிறார். இங்கிருந்து ராஜ்யசபாவுக்கு செல்ல தகுதியானவர்கள் யாருமே இல்லையா. மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி, கன்னடர் அல்லாதவரை எம்.பி.,யாக முன்னிறுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு எதிராக, கன்னடர்கள் குரல் எழுப்ப வே ண்டிய நேரம் இது.
மாநில வாக்காளர்களை அவமதிக்கும் இந்த மோசமான நடைமுறையை நிறுத்தும்படி, அனைத்து கட்சிகளையும் கேட்டு கொள்கிறேன். கர்நாடக எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
