/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பன்றிகள் பண்ணையில் விசித்திர காய்ச்சல் 50க்கும் மேற்பட்டவை உயிருடன் புதைப்பு
/
பன்றிகள் பண்ணையில் விசித்திர காய்ச்சல் 50க்கும் மேற்பட்டவை உயிருடன் புதைப்பு
பன்றிகள் பண்ணையில் விசித்திர காய்ச்சல் 50க்கும் மேற்பட்டவை உயிருடன் புதைப்பு
பன்றிகள் பண்ணையில் விசித்திர காய்ச்சல் 50க்கும் மேற்பட்டவை உயிருடன் புதைப்பு
ADDED : ஜூன் 02, 2025 01:40 AM

பாகல்கோட்,: பன்றிகள் வளர்க்கும் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதியினர் அச்சம் அடைந்து உள்ளனர்.
பாகல்கோட், இளகல் தாலுகா, கோரபாலா கிராமத்தில் உள்ள பன்றிகள் வளர்க்கும் பண்ணையில், கடந்த சில நாட்களாக பன்றிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால், பண்ணையின் உரிமையாளர், கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். கடந்த மே 22ம் தேதி பன்றிகளின் ரத்த மாதிரியை, கால்நடை மருத்துவர்கள் சேகரித்து, ஆய்வகத்திற்கு அனுப்பினர்.
இந்த ரத்த மாதிரிகளின் முடிவுகள் நேற்று கிடைத்தது. இதில், பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வந்து உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளின் மூன்று விரைவுக்குழு, விரைவாக பண்ணை இருக்கும் பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிருடன் புதைக்கப்பட்டன.
இதையடுத்து, பண்ணையை சுற்றியுள்ள 1 கிலோ மீட்டர் வரையிலான பகுதியை நோய் பாதிப்பு மண்டலமாகவும்; 1 முதல் 10 கி.மீ., வரையுள்ள பகுதியை நோய் பரவும் எச்சரிக்கை மண்டலமாகவும் கால்நடை பராமரிப்பு துறை அறிவித்தது. இதனால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர்.
கால்நடை பராமரிப்பு துறையின் துணை இயக்குநர் சிவானந்த கரடிகுடா கூறியதாவது:
இந்த பண்ணை பன்றிகள், இனப்பெருக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது. பண்ணையை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. எனவே, மாவட்டத்தில் உள்ளோர் கவலைப்பட தேவையில்லை. அதுமட்டுமின்றி, இங்கிருந்து தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பன்றிகள் அனுப்பப்பட்டு உள்ளன. எனவே, இந்த நோய், பல மாநிலங்களிலும் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.