ADDED : ஜூலை 11, 2026 11:28 PM
அ நிறம் | அளவு
விஜயபுரா: கார் விபத்துக்குள்ளானதில், இதில் இருந்த ஒரே குடும்பத்தின் மூவர் உயிரிழந்தனர்.
விஜயபுரா மாவட்டம், பசவனபாகேவாடி தாலுகாவின், மனகூலி அருகில் உள்ள, தேசிய நெடுஞ்சாலை - 50ல், நேற்று முன் தினம் காரொன்று, வேகமாக வந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து, சாலை டிவைடர் மீது மோதியது.
காரில் இருந்த சத்யவேணி, 38, இவரது மகன்கள் ஹரிவெங்கடராம், 20, ஜஸ்வந்த், 18, உயிரிழந்தனர். தந்தை ராகவேந்திரா, 41, காயமடைந்து, மருத்துவனையில் சிகிச்சை பெறுகிறார்.
இவர்களின் குடும்பத்தினர், கொப்பால் மாவட்டத்தின், காரடகியில் இருந்து, ஷிரடிக்கு புறப்பட்டனர். வழியில் விபத்து நடந்துள்ளது. மனகூலி போலீசார் விசாரிக்கின்றனர்.
