/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகளை கொன்று தாய் தற்கொலை மன நோயால் ஏற்பட்ட விபரீதம்
/
மகளை கொன்று தாய் தற்கொலை மன நோயால் ஏற்பட்ட விபரீதம்
மகளை கொன்று தாய் தற்கொலை மன நோயால் ஏற்பட்ட விபரீதம்
மகளை கொன்று தாய் தற்கொலை மன நோயால் ஏற்பட்ட விபரீதம்
ADDED : அக் 04, 2025 04:33 AM

ஷிவமொக்கா: மகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற தாய், மகளின் உடல் மீது ஏறி நின்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஷிவமொக்கா நகரின், மெக்கான் மருத்துவமனையின் நர்சிங் குடியிருப்பில் வசிப்பவர் ராமண்ணா, 40. இவர் மெக்கான் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஸ்ருதி, 36. தம்பதிக்கு பூர்விகா, 11, என்ற மகள் இருந்தாள். ஆதி சுஞ்சனகிரி தனியார் பள்ளியில், பூர்விகா ஆறாம் வகுப்பு படித்தார்.
ஸ்ருதி மனநிலை சரியில்லாதவர். அவ்வப்போது விசித்ரமாக நடந்து கொள்வார். இவரை மனநல டாக்டரிடம் அழைத்துச் சென்று ராமண்ணா சிகிச்சை அளித்தார். தினமும் மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். ராமண்ணா நேற்று முன்தினம் இரவு ஷிப்ட் பணிக்கு சென்றிருந்தார். தாயும், மகளும் வீட்டில் இருந்தனர்.
இரவு 10:30 மணியளவில் மாத்திரை போட்டுக்கொண்ட ஸ்ருதி, விசித்திரமாக நடந்து கொண்டுள்ளார். தாயின் செயலால் பீதியடைந்த மகள் பூர்விகா, தன் தந்தைக்கு போன் செய்து, 'அம்மா விசித்திரமாக நடந்து கொள்கிறார். மிகவும் பயமாக இருக்கிறது' என்றார். தந்தையும் மகளுக்கு தைரியம் கூறினார்.
பூர்விகா ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஸ்ருதி சமையல் அறையில் இருந்த அரிவாளை கொண்டு வந்து, மகளின் தலையில் வெட்டிக் கொலை செய்தார். அதன்பின் மகளின் உடலை, மின் விசிறிக்கு அடியில் இழுத்துச் சென்றார். அந்த உடல் மீது ஏறி நின்று, துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பணி முடிந்து, நேற்று காலை ராமண்ணா வீட்டுக்கு வந்தபோது, கதவு உட்புறமாக பூட்டியிருந்தது. பல முறை தட்டியும் திறக்கவில்லை. பீதியடைந்த அவர் அக்கம், பக்கத்தினரின் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மனைவியும், மகளும் இறந்து கிடப்பது தெரிந்தது.
தகவலறிந்து அங்கு வந்த ஷிவமொக்கா நகர் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டனர். வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.