/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாய்மொழி தினம் இன்று கொண்டாட்டம்
/
தாய்மொழி தினம் இன்று கொண்டாட்டம்
ADDED : பிப் 21, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், சர்வதேச தாய் மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு ஹெச்.ஏ.எல்., பழைய விமான நிலைய சாலை, கொடிஹள்ளியில் உள்ள, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வகத்தில் 'சர்வதேச தாய் மொழி தினம்' இன்று மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கொண்டாடப்படுகிறது.
தமிழ் விஞ்ஞானி டில்லிபாபு, தமிழில் பேசுகிறார். ஒடியா, பெங்காலி, மராத்தி, துளு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட மொழியை சேர்ந்த அதிகாரிகளும் தங்கள் மொழியில் பேச உள்ளனர். மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பல்வேறு மொழிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.