/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மிருதுஞ்செய சுவாமிகள் பதவி அதிரடி பறிப்பு
/
மிருதுஞ்செய சுவாமிகள் பதவி அதிரடி பறிப்பு
ADDED : ஏப் 18, 2025 07:01 AM

ஹூப்பள்ளி: பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு ஆதரவாக பேசிய, பஞ்சமசாலி மடத்தின் ஜெய மிருதுஞ்செய சுவாமிகள், அகில இந்திய லிங்காயத் பஞ்சமசாலி டிரஸ்ட் தலைவர் பதவியை இழந்தார்.
அகில இந்திய லிங்காயத் பஞ்சமசாலி சார்பில் டிரஸ்ட் இயங்குகிறது. இந்த டிரஸ்ட் நிர்வாகம், பஞ்சமசாலி மடத்தின் ஜெய மிருதுஞ்செய சுவாமிகளை தலைவராக நியமித்திருந்தது.
தலைவராக இருப்பவர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சமுதாயத்தை ஒருங்கிணைக்க வேண்டும். ஆனால் ஜெய மிருதுஞ்செய சுவாமிகள், தனி நபருக்கு ஆதரவாக நிற்கிறார். பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு ஆதரவாக பேசுகிறார். இதற்கு பஞ்சமசாலி டிரஸ்ட் நிர்வாகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்த காரணத்தால், டிரஸ்ட் நிர்வாகிகள், நேற்று ஜெய மிருதுஞ்செய சுவாமிகளை, தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவரை நியமித்தனர்.

