/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொலை வழக்கு: எம்.எல்.ஏ., ஜாமின் மனு தள்ளுபடி
/
கொலை வழக்கு: எம்.எல்.ஏ., ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஜன 28, 2026 08:52 AM

பெங்களூரு: பா.ஜ., பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் சிறையில் உள்ள, காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியின் ஜாமின் மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தார்வாட் ஜில்லா பஞ்சாயத்து பா.ஜ., உறுப்பினர் யோகேஷ் கவுடா; 2016 ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி கைது செய்யப்பட்டார். பின், இவ்வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில், 2021ல் ஜாமினில் வெளியே வந்தார் வினய் குல்கர்னி. அதன்பின், சாட்சிகளை கலைக்க முயற்சித்ததாக, சி.பி.ஐ., தரப்பில், 'அபெக்ஸ்' நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால், ஜாமின் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதி சுனில் தத் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'மனுதாரருக்கு ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து உள்ளது. இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு விண்ணப்பம் தாக்கல் செய்வதே நல்லது. எனவே, அவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றார்.

