UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
ஷிவமொக்கா: ஷிவமொக்காவின் அசோக் நகரில் வசித்தவர் உஸ்மான் அலி, 34. இவர் கட்டட கட்டுமான பணி செய்கிறார்.
நேற்று முன் தினம் இரவில், பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பைக்குகளில் வந்த நான்கு இளைஞர்கள், கஞ்சா போதையில் இருந்தனர்.
அவர்கள், உஸ்மான் அலி கையில் 500 ரூபாய் இருப்பதை கவனித்தனர். அவரை வழி மறித்து பணத்தை கேட்டனர்.
அவர் தர மறுத்ததால், கோபமடைந்த இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, பணத்தை பறித்து தப்பியோடினர். இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த தொட்டபேட் போலீசார், உஸ்மான் அலியின் உடலை மீட்டனர். இளைஞர்களை தேடுகின்றனர்.
