ADDED : செப் 05, 2025 11:13 PM

பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள், வீட்டில் சாப்பிட ஏதாவது ஸ்நாக்ஸ் உள்ளதா என்று எதிர்பார்ப்பது வழக்கம். பசியுடன் இருக்கும் குழந்தைகள், தங்கள் அம்மாக்களிடம் நுாடுல்ஸ், பாஸ்தா என்று சீக்கிரமாக ஏதாவது செய்து கொடுங்கள் என்று கேட்பதையும் பார்த்து இருப்போம். ஒரே மாதிரியாக நுாடுல்ஸ், பாஸ்தா சாப்பிட்டு குழந்தைகளுக்கு போர் அடித்து இருக்கலாம். இதனால் சற்று வித்தியாசமாக மஷ்ரூம் ஒயிட் சாஸ் பாஸ்தா செய்து கொடுக்கலாமே...
செய்முறை அடுப்பை ஆன் செய்து பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, பாஸ்தா போட்டு கிளறவும். பின், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி வைக்கவும். ஐந்து முதல் ஏழு நிமிடம் கழித்து மூடியை திறந்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தோல் உரித்த பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேகவைத்திருக்கும் மஷ்ரூமை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும். பின், ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையை வாணலியில் போட்டு ஆர்கானோ, சில்லி பிளேக்ஸ், உப்பு துாவி விட்டு இறக்கினால் சூடான, சுவையான மஷ்ரூம் ஒயிட் சாஸ் பாஸ்தா ரெடி. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் கூட விரும்பி சாப்பிடுவர்.
இந்த ரெசிபியை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் கூட கொடுத்து அனுப்பலாம். கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவர். லஞ்ச் பாக்ஸை காலி செய்து விட்டு வீட்டிற்கு வருவர்
- நமது நிருபர் - .