/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு தசரா செப்., 22ல் துவக்கம் 11 நாட்கள் நடத்தபடுமென முதல்வர் அறிவிப்பு
/
மைசூரு தசரா செப்., 22ல் துவக்கம் 11 நாட்கள் நடத்தபடுமென முதல்வர் அறிவிப்பு
மைசூரு தசரா செப்., 22ல் துவக்கம் 11 நாட்கள் நடத்தபடுமென முதல்வர் அறிவிப்பு
மைசூரு தசரா செப்., 22ல் துவக்கம் 11 நாட்கள் நடத்தபடுமென முதல்வர் அறிவிப்பு
ADDED : ஜூன் 28, 2025 11:10 PM

பெங்களூரு: ''இந்தாண்டு மைசூரு தசரா விழா, 11 நாட்கள் நடக்கும். தேவையில்லாமல் பணத்தை செலவிடுவது பெருமையல்ல; மக்களின் பாதுகாப்பும், வசதிக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதா மாநாட்டு அரங்கில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று மைசூரு தசரா திருவிழா தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
இம்முறை மைசூரு தசராவை துவக்கி வைப்பவரை தேர்வு செய்யும் பொறுப்பு, எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அரசின் சாதனைகள், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டம் குறித்து, மக்களுக்கு தெரியும் வகையில் திட்டமிட வேண்டும்.
இம்முறை மாநிலம் முழுதும் நல்ல மழை பெய்து ஆறுகள், ஏரிகள் நிரம்பி உள்ளன. தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு செப்டம்பர் 22ம் தேதி துவங்கும் தசரா விழா, அக்டோபர் 2ம் தேதி வரை 10 நாட்களுக்கு பதிலாக, 11 நாட்கள் நடக்கிறது.
விஜயதசமி, அக்டோபர் 2ம் தேதி வருவதால், ஸ்டில் படங்களில் காந்தியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தசராவுக்கென தனி வரலாறு, மதம், கலாசார பின்னணி உள்ளதால், இம்முறை, தசராவை பிரமாண்டமாக கொண்டாட, போதுமான நிதி வழங்கப்படும். அரசின் சாதனைகள், துறை சார்ந்த திட்டங்கள், முறையாக பிரதிபலிக்கும் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.
தசராவின்போது கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் முக்கியத்துவம் தர வேண்டும். இம்முறை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எக்காரணத்தை கொண்டும் அசம்பாவிதம் நடக்காத வகையில் இருக்க வேண்டும்
ஜம்பு சவாரியின்போது, அரண்மனை வளாகத்தில் போடப்படும் இருக்கைகள் எண்ணிக்கை குறைக்கப்படும்
சட்டம் - ஒழுங்கு ஏற்படாமல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்
சாமுண்டி மலைக்கு செல்லும் சாலை, கே.ஆர்.எஸ்., அணைக்கு செல்லும் சாலை உட்பட அனைத்து முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணிகளை இப்போதே துவங்க வேண்டும்
நாட்டுப்புற கலைகளை காட்சிப்படுத்த, தனியாக தளம் உருவாக்க வேண்டும்
கடந்த முறை மின்விளக்கு அலங்காரம் சிறப்பாக இருந்தது. இம்முறையும் அதுபோன்று செய்ய வேண்டும்
அனைத்து மாவட்டங்களில் இருந்து வரும் ஸ்டில் படங்கள், வித்தியாசமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
மைசூரு திறப்பு விழாவின்போது, கண்காட்சி மைதானத்தில் உள்ள அரங்குகள் முழுமையாக திறந்திருக்க வேண்டும். எந்த அரங்கு காலியாக இருக்கக்கூடாது
தங்க அட்டைகள் வழங்குவதில் குழப்பம் இல்லாத வகையில், விநியோகிக்க வேண்டும்
மைசூரு நகரின் அழகை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
தசராவை காண வருவோருக்கு போதுமான கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம் உட்பட வசதிகள் செய்ய வேண்டும்
இம்முறையும் பெரிய அளவிலான ட்ரோன் கண்காட்சி ஏற்பாடு செய்யப்படும்
தசராவின்போது குறிப்பிட்ட இடங்களில் அதிகாரிகள் இருப்பதில்லை என்று பொது மக்கள் புகார் அளிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.