/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏப்ரல் 25ம் தேதி வரை நந்தி மலையில் தடை
/
ஏப்ரல் 25ம் தேதி வரை நந்தி மலையில் தடை
ADDED : மார் 24, 2025 04:54 AM

சிக்கபல்லாபூர்: நந்திமலையில் புதுப்பிக்கும் பணிகள் நடப்பதால், இன்று முதல் ஏப்., 25 வரை சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சிக்கபல்லாபூர் மாவட்டம், நந்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிப்பதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், கலெக்டர் ரவீந்திரன் அளித்த பேட்டி:
நந்தி மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை செல்லும் ஏழேகால் கி.மீ., சாலை சேதம் அடைந்து உள்ளது. இந்த சாலை சீரமைக்கப்பட வேண்டும். எனவே, நாளை (இன்று) முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதே வேளையில், வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் திங்கட்கிழமை காலை 8:00 மணி வரை வாகனங்கள் செல்லலாம். பணிகளை விரைந்து முடிக்கவும் பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.