/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டில்லியில் நந்தினி பாலுக்கு 'மவுசு' தினமும் 50,000 லிட்டர் விற்பனை
/
டில்லியில் நந்தினி பாலுக்கு 'மவுசு' தினமும் 50,000 லிட்டர் விற்பனை
டில்லியில் நந்தினி பாலுக்கு 'மவுசு' தினமும் 50,000 லிட்டர் விற்பனை
டில்லியில் நந்தினி பாலுக்கு 'மவுசு' தினமும் 50,000 லிட்டர் விற்பனை
ADDED : மே 23, 2025 05:33 AM

பெங்களூரு:கர்நாடகாவின் நந்தினி பாலுக்கு, டில்லியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் 50,000 லிட்டர் பால் விற்பனையாகிறது. இதனால் அதிகாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கர்நாடக மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும், நந்தினி பால் விற்பனை மார்க்கெட்டை விரிவுபடுத்துவதில், கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுசங்கம் ஆர்வம் காட்டுகிறது. வேறு மாநிலங் களில் பால் விற்பனையை துவக்குகிறது.
கடந்த 2024 நவம்பரில், டில்லியில் நந்தினி பால் விற்பனை துவக்கப்பட்டது. மாண்டியா பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து, டில்லிக்கு பால் வினியோகிக்கப்படுகிறது. முதற்கட்டமாக 10,000 லிட்டர் பால் வினியோகிக்கப்பட்டது. ஆரம்ப நாட்களில் சில குழப்பங்களால் பால் விற்பனை குறைந்தது.
மாண்டியா பால் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் மற்றும் மார்க்கெட் பிரிவு அதிகாரிகள், டில்லியில் தங்கி பால் விற்பனையை அதிகரிக்க முயற்சித்தனர்.
இதன் பயனாகவிற்பனை கிடுகிடுவென அதிகரித்தது. தற்போது டில்லி மார்க்கெட்டில் தினமும் 50,000 லிட்டர் பால் விற்பனையாகிறது. தரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதால்,மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பால் விற்பனை அதிகரித்ததால், மாண்டியா பால் கூட்டுறவு அலுவலகத்தில், அதிகாரிகள், ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
நந்தினி பாலுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்ததால், நந்தினி பிராண்டின் மற்றஉற்பத்திகளைஅறிமுகம் செய்ய, அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.