/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா மரங்கள் பற்றி மக்கள் அறிவதற்கு புதிய சுற்றுலா திட்டம்
/
கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா மரங்கள் பற்றி மக்கள் அறிவதற்கு புதிய சுற்றுலா திட்டம்
கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா மரங்கள் பற்றி மக்கள் அறிவதற்கு புதிய சுற்றுலா திட்டம்
கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா மரங்கள் பற்றி மக்கள் அறிவதற்கு புதிய சுற்றுலா திட்டம்
ADDED : ஜூலை 18, 2025 11:19 PM

பெங்களூரு: லால்பாக் பூங்கா மற்றும் கப்பன் பூங்காவில் உள்ள அபூர்வமான செடிகள், மரங்கள் பற்றி பொது மக்கள் அறியும் நோக்கில், 'பூங்காக்கள் சுற்றுலா' என்ற திட்டத்தை தோட்டக்கலைத்துறை வகுத்துள்ளது.
அந்தத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் கப்பன் பூங்கா, லால்பாக் பூங்காவில் நுாற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான மரங்கள், அபூர்வ செடி, கொடிகள் உள்ளன. இந்த பூங்காக்கள், மக்களுக்கு துாய்மையான காற்றை அளிக்கின்றன. தற்போது மரங்கள், பூக்கும் காலமாகும்.
பூங்காக்களில் உள்ள அபூர்வமான செடிகள், மரங்கள், இவற்றின் குணங்கள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ள, தோட்டக்கலைத் துறை 'பூங்காக்கள் சுற்றுலா' என்ற திட்டத்தை வகுத்துள்ளது. கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா என, இரண்டு பூங்காக்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இது தாவரவியல் மாணவர்கள், செடி மரங்களைப் பற்றி ஆர்வம் உள்ளவர்கள், உயிரியல் ஆய்வாளர்கள், பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்.
கப்பன் பூங்காவில், 27ம் தேதி, இத்திட்டம் துவக்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பூங்காக்களில் சுற்றுலா நிகழ்ச்சி நடக்கும்.
இங்குள்ள மரங்கள், செடி, கொடிகள் குறித்து, பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்க, 10 சுற்றுச்சூழல் வல்லுநர்கள், வழிகாட்டிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் மக்களுக்கு தகவல் தெரிவிப்பார்.
தலா 30 பேர் கொண்ட ஒரு குழுவுக்கு, ஒரு வழிகாட்டி நியமிக்கப்படுவவார். சுற்றுலா வரும் பெரியவர்களுக்கு 200 ரூபாய், சிறார்களுக்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள், ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கப்பன் பூங்கா, லால்பாக் பூங்காக்களில் உள்ள, பல ஆயிரக்கணக்கான மரங்கள், செடி கொடிகள் பற்றி, ஒரே நாளில் தெரிந்து கொள்வது கஷ்டம். எனவே ஏழு முதல் எட்டு பிரிவுகளாக பிரித்து, தகவல் தெரிவிக்க ஆலோசிக்கப்படுகிறது.
இங்குள்ள மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் தொடர்பாக, பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு வழிகாட்டிகள் பதில் அளிப்பர். மக்களிடம் வசூலாகும் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய், வழிகாட்டிகளுக்கு ஊதியம் வழங்க பயன்படுத்தப்படும்.
மீதமுள்ள தொகை தோட்டக்கலைத்துறையை சேரும். முதற்கட்டமாக கப்பன் பூங்காவில், சுற்றுலா நிகழ்ச்சி துவக்கப்படும். மலர் கண்காட்சி முடிந்த பின் லால்பாக் பூங்காவில், இந்த நிகழ்ச்சி துவங்குவோம். இதைப் பற்றி தகவல் தெரிந்து கொள்ள, தனி வெப்சைட் துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.