தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாலை விபத்தில் புது மணப்பெண் பலி

 சாலை விபத்தில் புது மணப்பெண் பலி

 சாலை விபத்தில் புது மணப்பெண் பலி


ADDED : ஜூலை 18, 2026 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 12:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: சமீபத்தில் திருமணமான தம்பதி சென்ற பைக், விபத்துக்குள்ளானதில் மனைவி உயிரிழந்தார்; கணவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின், பிதரகூடு கிராமத்தில் வசிப்பவர் புனித், 25. இவருக்கும் மூகனஹுன்டி கிராமத்தை சேர்ந்த மேகனா, 20, என்பவருக்கும், 15 நாட்களுக்கு முன், இரு குடும்பத்தினர் சம்மதத்துடன், திருமணம் நடந்தது.

புதுமண தம்பதி வெளியே செல்வதற்காக, நேற்று காலை பைக்கில் புறப்பட்டனர். மைசூரின், ஆர்.டி.நகர் அருகில் வரும் போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதில் கீழே விழுந்த மேகனாவின் தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது கணவர் புனித்தின் தலை, கை, காலில் அடிபட்டு சிகிச்சை பெறுகிறார்.

மேகனா ஹெல்மெட் அணியாமல், பைக்கில் பயணித்தால், தலையில் காயமடைந்து இறக்க நேரிட்டது. ஹெல்மெட் அணிந்திருந்தால் இறப்பை தவிர்த்திருக்கலாம் என, அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த, மைசூரு நகர் போலீசார் விபத்து தொடர்பாக, வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us