ADDED : செப் 12, 2026 04:37 AM
சிறையில் சிம் கார்டு ரூ.50,000 பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், கடந்த 8 மாதங்களில் மட்டும், 300 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என, சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார் நேற்று தெரிவித்தார். சிறைக்குள் கைதிகளுக்கு ஒரு மொபைல் போனை ஒரு லட்சம் ரூபாய்க்கும், சிம் கார்ட்டை 50,000 ரூபாய்க்கு விற்ற தகவல் தெரியவந்துள்ளது.
எஸ்.பி., வழக்கை ரத்து செய்ய மறுப்பு
சிக்கமகளூரில், 2012ல் போலீஸ் துறை சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்காத, மல்லந்துார் போலீஸ் நிலைய எஸ்.ஐ., சந்திரசேகர் மீது, பேப்பர் வெயிட்டரை துாக்கி வீசி காயப்படுத்தியதாக, அப்போதைய எஸ்.பி., விகாஸ் குமார் விகாஸ் வழக்குப்பதிவானது.
இந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை, விசாரணை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ரவி ஹொசமணி, விகாஸ்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, விசாரணையை தொடர நேற்று உத்தரவிட்டார்.
