தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சில வரிகளில் செய்திகள்

 சில வரிகளில் செய்திகள்

 சில வரிகளில் செய்திகள்


ADDED : செப் 19, 2026 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 11:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடல் உறுப்புகள் தானம் மைசூரு நகரின் மூடலஹுன்டி கிராமத்தை சேர்ந்த சிவா. இவரது மனைவி லட்சும்மா. இவர்களின் ஒரே மகன் பரத்குமார், 19, பழ வியாபாரம் செய்து வந்தார். செப்டம்பர் 8ம் தேதி மதியம், மைசூரிலிருந்து தன் கிராமத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

மைசூரு - பன்னுார் சாலையின் தந்திகுள்ளு அருகில் வளைவில் செல்லும் போது, வேகமாக வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், பைக் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட பரத்குமார் தலையில் பலத்த அடிபட்டது. அப்பகுதியினர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மறுநாள் அவரது மூளை செயலிழந்தது. உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தென்படாததால், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர். அதன் படி, இதயம், கண்கள், சிறுநீரகம் உட்பட தேவையான உறுப்புகள் எடுக்கப்பட்டன.

பெண் கொலையில் காதலர் கைது தாவணகெரே நகரின் சேகரப்பா நகரில் வசித்தவர் நாகரத்னா, 45. குடும்ப தகராறால், கணவரை பிரிந்த இவர், தனது மூன்று பிள்ளைகளையும் வேறு இடங்களில், குடி வைத்து விட்டு, அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். திருமண மண்டபங்களில், வேலை செய்து வந்தார். நாகரத்னாவுக்கு நாகராஜ், 35, என்பவர் அறிமுகமானார். இருவரிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சில நாட்களாக, இவர்கள் தினமும் சண்டை போட்டனர். வீட்டை காலி செய்யும்படி அக்கம், பக்கத்தினர் திட்டினர்.

நேற்று காலையில், நாகரத்னாவை கத்தியால் குத்தி, கொலை செய்த நாகராஜ் தப்பியோட முயற்சித்தார். அப்பகுதியினர், நாகராஜை பிடித்து, மரத்தில் கட்டி வைத்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஏ.பி.எம்.சி., போலீசார், அவரை கைது செய்தனர்.

தங்கவயலில் 'ஜாப் மேளா' ஆர்.கே.பவுன்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தினர், சாமிநாதபுரம் பகுதியில் வேலைவாய்ப்பு முகாமை நேற்று நடத்தினர். நிறுவன தலைவர் மோகன் கிருஷ்ணா கூறுகையில், ''ஐ.டி.ஐ., டிப்ளமோ, தொழிற்நுட்ப கல்வி பயின்ற பலருக்கும் வேலை வழங்க கோலார், மாலுார், பெங்களூரு உட்பட பல நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள், தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்க முன் வந்தன. இதையடுத்து, தங்கவயலில் முகாம் நடத்தப்படுகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், நேர்முக தேர்வு நடத்தின,'' என்றார்.

கள்ளக்காதலி கைது தாவணகெரே நகரின், நாகம்மா கேசவமூர்த்தி லே - அவுட்டில் வசித்தவர் மஞ்சப்பா, 40. இவர் தன் மனைவி, குழந்தைகளை விட்டு விலகி, கடந்த ஆறு ஆண்டுகளாக தனியாக வசிக்கிறார். இவருக்கு சபீனா, 36, என்பவர் அறிமுகமானார். இவர் கணவரை விவாகரத்து செய்தவர். இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர். மஞ்சப்பாவும், சபீனாவும் குடிப்பழக்கம் உள்ளவர்கள்.

தினமும் சேர்ந்து மதுபானம் அருந்துவர். வழக்கம் போன்று, நேற்று முன் தினம் இரவும், மதுபானம் அருந்தி போதையில் இருந்தனர். இருவருக்கும் ஏதோ விஷயமாக வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த சபீனா, சேலையால் மஞ்சப்பாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். சபீனா கைது செய்யப்பட்டார்.

யானை தாக்கி இருவர் காயம் குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவின் அத்திமங்களா கிராமத்தில் வசிக்கும் சுப்ரமணி, 60, உமேஷ், 53, ஆகியோர், நேற்று காலை ஒரே பைக்கில், வனப்பகுதி வழியாக கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த காட்டுயானையால், அதிர்ச்சி அடைந்த இருவரும் தப்பிக்க முயன்றும் முடியவில்லை. இருவரையும் தும்பிக்கையால் தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றது. அப்பகுதியினர் உதவியால், இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அரசு பாடுபடும் மேற்கு தொடர்ச்சி தொடர்பாக, கஸ்துாரி ரங்கன் அறிக்கை தொடர்பாக ஷிவமொக்கா தீர்த்தஹள்ளியில் நடந்த பொது மக்களுடனான கலந்துரையாடல், அறிக்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் சிவகுமார் பேசுகையில், ''கஸ்துாரி ரங்கன் அறிக்கை உட்பட, விவசாயிகளின் உயிர்களை காப்பாற்ற எங்கள் அரசு பாடுபடும். சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் உள்ளிட்ட இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் பிரச்னை தீர என்னால் முடிந்தவரை உதவுவேன். மாநில நலனுக்காகத் தேவையான சட்டத் திருத்தங்களை செய்ய முயற்சிப்பேன்,'' என்றார்.

அஹிந்தாவுக்கு புத்துயிர்? துமகூரில் முன்னாள் அமைச்சர் ராஜண்ணா வீட்டில் நேற்று இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் சித்தராையா, அவரது ஆதரவாளர்கள், அஹிந்தா அமைப்பினர் என பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் ராஜண்ணாவுக்கு, அபெக்ஸ் வங்கி தலைவர் பதவி வழங்காதது, அஹிந்தா அமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜண்ணாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது.

'மாஜி' பா.ஜ., - எம்.பி., மீது புகார் மைசூரு மாவட்டம் டி.நரசிபுராவில் ஹிந்து மகாசபை, ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பினர், பா.ஜ., - முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா தலைமையில் நேற்று முன்தினம் விநாயகர் ஊர்வலம் நடந்தது. இது தொடர்பாக மைசூரு எஸ்.பி., மல்லிகார்ஜுனிடம், நகர காங்கிரசார் புகார் அளித்து உள்ளனர். 'குறிப்பிட்ட நேரத்தை கடந்து ஊர்வலம் நடந்து உள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்ற பலரும், கோபப்படும் வகையில் பேசி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டு உள்ளார்.

பெண்ணிடம் சில்மிஷம் பாகல்கோட் நகரை சேர்ந்த கல்லுாரி மாணவி, கடந்த 17ம் தேதி மாலையில், கல்லுாரி முடிந்து வீட்டுக்கு சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சுதீப் என்பவர், தனது அந்தரங்க உறுப்பை, இளம் பெண்ணை நோக்கி காண்பித்தார். அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். அங்கிருந்த சிலர் சுதீப்பை தாக்கினர்.

நவநகர் போலீசில், இளம் பெண் புகார் அளித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுதீப்பின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சேத்தன், ரோகன் ஆகியோரை போலீசார் கைது செய்ததற்கு இளம் பெண் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us