1,895 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியீடு
1,895 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியீடு
UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 11:28 PM
பெங்களூரு: பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்காக, 1,895 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடதியில் ஒருங்கிணைந்த டவுன்ஷிப் கட்ட, பிடதி, பைரமங்களா, காஞ்சகரனஹள்ளி உட்பட 9 கிராமங்களின், 7,351 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
பசுமையான நிலத்தை கையகப்படுத்தி டவுன்ஷிப் அமைக்க விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசுக்கு எதிராக ஓராண்டிற்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர்.
திட்டத்தை கைவிட கோரி அரசை, எதிர்க்கட்சிகளும் வலியுறுத்துகின்றன.
ஆனால் டவுன்ஷிப் அமைத்தே தீருவேன் என்று, முதல்வர் சிவகுமார் பிடிவாதமாக உள்ளார். முதல்கட்டமாக, 516 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த ஜூன் 11ம் தேதி அரசு வெளியிட்டது.
இரண்டாம் கட்டமாக, 4,940 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஆகஸ்டில் அறிவிப்பு வெளியான நிலையில், மூன்றாம் மற்றும் இறுதி கட்டமாக மேலும், 1,895 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக பைரமங் களா கிராமத்தில், 1,142 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, 1,800 கோடி ரூபாயை அரசு முன்கூட்டியே அறிவித்துள்ளது.
இதில் 1,236 கோடி ரூபாய் ரொக்கமாகவும், மேலும், 564 கோடி ரூபாய் மதிப்பில் நிலங்களும் வழங்கப்பட உள்ளன.
விவசாயிகள் போராட்டம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல், நிலம் கையகப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளதால், வரும் நாட்களில் பிடதியில் போராட்டங்கள் அதிகரிக்க உள்ளது.
எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த விவசாயிகள் தயாராக உள்ளனர்.
