தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தனியார் நிறுவனங்களில் கன்னடர்கள் புறக்கணிப்பு நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் சிவகுமார் உறுதி

தனியார் நிறுவனங்களில் கன்னடர்கள் புறக்கணிப்பு நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் சிவகுமார் உறுதி

தனியார் நிறுவனங்களில் கன்னடர்கள் புறக்கணிப்பு நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் சிவகுமார் உறுதி


UPDATED : நவ 01, 2026 12:00 AM

ADDED : அக் 31, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 12:00 AM ADDED : அக் 31, 2026 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் உள்ள ஐ.டி., உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக, கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பு அறிவித்த நிலையில், ‘யாரும் எதுவும் செய்ய வேண்டாம்; சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, முதல்வர் சிவகுமார் தெரிவித்து உள்ளார்.

பெங்களூரில் ஏராளமான ஐ.டி., மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள நிறுவனங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணிபுரிகின்றனர்.

ஐ.டி., நிறுவனங்களில் கன்னடர்களை பணிக்கு அமர்த்துவதில் பாகுபாடு காண்பிப்பதாக இளம்பெண் ஒருவர், சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவுக்கு கன்னடர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதுபோன்ற, தங்களின் அனுபவங்கள் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

போராட்டம்



இவ்விஷயத்தை கண்டித்து, ஐ.டி., நிறுவனங்கள் முன் போராட்டம் நடத்தப்போவதாக கன்னட ரக் ஷன வேதிகே சங்கத் தலைவர் நாராயண கவுடா அறிவித்தார்.

இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி:

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு பாரபட்சம் காண்பிப்பதை கண்டித்து, போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

முதல் கட்டமாக, இன்று முதல் வரும் 30ம் தேதி வரை, மாநிலம் முழுதுமுள்ள ஐ.டி., உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் நபர்கள் குறித்து விபரங்கள் கேட்டு பெறப்படும்.

இதன் மூலம், ஒவ்வொரு நிறுவனத்திலும் கன்னடர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என தெரியவரும். இதை வைத்து கொண்டு கன்னடர்களுக்கு பாரபட்சம் காண்பிக்கும் நிறுவனங்களை தெரிந்து கொள்வோம். அந்த நிறுவனங்கள் முன்பு போராட்டம் நடத்துவோம்.

பணியாளர்கள் குறித்த விபரங்களை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் முன்பும் போராட்டம் நடத்தப்படும். இதில், கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பினர் உள்ளூர் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்பர்.

இடம், மின்சாரம், குடிநீர் என அனைத்து வளங்களையும் எடுத்துக்கொண்டு, எங்களுக்கு வேலை தரமாட்டீர்களா. நாங்கள் ஒன்றும் ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்து பணம் எதுவும் கேட்கவில்லை. கர்நாடகாவில் நிறுவனம் நடத்துவோர் கன்னடர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

இதுவே, எனது வாதம். அவரவரின் திறமைக்கேற்ப வேலை வழங்கவும். தனியார் நிறுவனங்களிலும் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும். இதை மாநில அரசு நிறைவேற்றவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் நடவடிக்கை



முதல்வர் சிவகுமார் கூறியதாவது:

பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், கன்னட மொழி பேசுவோர் புறக்கணிக்கப்படுவதாகவும் வரும் புகார்களை காங்கிரஸ் அரசு தீவிரமாக கவனித்து வருகிறது.

கன்னடர்களின் உரிமை, கண்ணியம், வேலை வாய்ப்பு குறித்து எப்போதும் ஆலோசிக்கப்படும். கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்களுக்கு எதிராக செய்யப்படும் பாகுபாட்டை காங்., அரசு பொறுத்துக்கொள்ளாது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்விஷயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நான் உறுதியளிக்கிறேன். கன்னட அமைப்பினர் தனியார் நிறுவனங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம். போராட்டம் நடத்தவும் வேண்டாம். இவ்விஷயத்தை மாநில அரசே கையாளும். இதுபோன்ற பிரச்னைகள் பேச்சு மூலம் சட்டரீதியாக தீர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us