/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு தடை விதிக்கும் எண்ணம் இல்லை
/
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு தடை விதிக்கும் எண்ணம் இல்லை
ADDED : அக் 18, 2025 11:07 PM

பெலகாவி: ''எந்த அமைப்பையோ, நிறுவனத்தையோ அல்லது சங்கத்தையோ தடை செய்யும் திட்டமோ அல்லது எண்ணமோ காங்கிரஸ் அரசுக்கு இல்லை,'' என, சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆர்.எஸ்.எஸ்.,க்கு தடை விதிக்க வேண்டும் என்று எம்.எல்.சி., ஹரிபிரசாத் கருத்துத் தெரிவித்துள்ளார்.
எங்கள் அரசுக்கு எந்த அமைப்பையோ, நிறுவனத்தையோ அல்லது சங்கத்தையோ தடை செய்யும் திட்டமோ அல்லது எண்ணமோ இல்லை.ஒவ்வொரு ஆண்டும் பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்து, முறையாக முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தேதியும் நிர்ணயம் செய்யவில்லை. இருப்பினும், பாரம்பரியபடி பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
நவம்பர் ஒன்றாம் தேதி புவனேஸ்வரி தேவியை கவுரவிப்பதும், கர்நாடக ஒருங்கிணைப்பை மிகுந்த ஆடம்பரமாக கொண்டாடுவது, ஒவ்வொருவரின் கடமை. தயவு செய்து, அனைவரும் அதை செய்ய வேண்டும். அன்றைய தினம், புவனேஸ்வரி தேவியின் ஊர்வலத்திலும், கர்நாடக ராஜ்யோத்சவா நிகழ்ச்சிகளிலும் ஒத்துழைக்க வேண்டும்.
இம்முறை எம்.இ.எஸ்., எனும் மஹாராஷ்டிரா ஏகிகிரண் சமிதியினர், கன்னட ராஜ்யோத்சவாவை, கருப்பு தினமாக அனுசரித்தால் , சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் சரியான நடவ டிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., அரசியல் தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் பொது இடங்களில் சட்டப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க, ஜெகதீஷ் ஷெட்டர் இருந்தபோது வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. நாங்கள், அதை மீண்டும் சொல்கிறோம். ஆர்.எஸ்.எஸ்.,ஐ நாங்கள் குறிவைக்கவில்லை. இந்த வழிகாட்டுதல் அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். இதில் பா.ஜ., அரசியல் செய்கிறது. - சித்தராமையா, முதல்வர்

