தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது: பிரதமர் மோடி முன் சிவகுமார் பேச்சு

மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது: பிரதமர் மோடி முன் சிவகுமார் பேச்சு

மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது: பிரதமர் மோடி முன் சிவகுமார் பேச்சு

1


UPDATED : நவ 14, 2026 03:23 AM

ADDED : நவ 13, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 03:23 AM ADDED : நவ 13, 2026 11:34 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ''மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது,'' என, பிரதமர் மோடி முன், கர்நாடக முதல்வர் சிவகுமார் பேசியுள்ளார்.

மைசூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோளரங்கத்தை திறந்து வைத்த பின், அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் முன், கர்நாடக முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கி, சட்ட நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. கர்நாடகா தன் நிலத்தில் அணை கட்ட யாருடைய அனுமதியும் பெற தேவையில்லை என்றும், அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனால் அணை கட்டும் திட்டத்தை தாமதம் இன்றி தொடர, இறுதி சட்டப்பூர்வ அனுமதிகளை மத்திய அரசு வழங்கி எங்களுக்கு உதவ வேண்டும். காவிரி ஆறு தமிழகம், புதுச்சேரி, கேரளா, பெங்களூரு மற்றும் பல பகுதிகளுக்கு உதவுகிறது. மேகதாதுவவில் அணை கட்டுவது தமிழகத்திற்கு உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, ஆறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமர் மோடியிடம் சிவகுமார் சமர்ப்பித்தார்.

 மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் நிதி பங்களிப்பு, நீண்டகால கடன்கள், செலவு மதிப்பீடுகளை மெட்ரோவுக்கான தேசிய தொழில்நுட்ப நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்

 சாத்தியமான, பாதுகாப்பான இடங்களில் மெட்ரோ பாதையுடன் கூடிய ஈரடுக்கு பாலம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்

 சர்ஜாபூர் - ஹெப்பால் மெட்ரோ வழித்தடத்திற்கு விரைவான ஒப்புதல் வழங்க வேண்டும்

 வறட்சியால் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க, தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் 22,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்

 ஒரு டன் கரும்புக்கான விலையை 5,500 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். சர்க்கரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை திருத்தியமைக்க வேண்டும். எத்தனால் மற்றும் பிற துணை பொருட்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கணக்கில் கொள்ள வேண்டும்

 கஸ்துாரிரங்கன் அறிக்கையின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us