sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

அரசியலில் யாரும் சன்னியாசி அல்ல அமைச்சர் பதவிக்கு லட்சுமண் சவதி 'துண்டு'

/

அரசியலில் யாரும் சன்னியாசி அல்ல அமைச்சர் பதவிக்கு லட்சுமண் சவதி 'துண்டு'

அரசியலில் யாரும் சன்னியாசி அல்ல அமைச்சர் பதவிக்கு லட்சுமண் சவதி 'துண்டு'

அரசியலில் யாரும் சன்னியாசி அல்ல அமைச்சர் பதவிக்கு லட்சுமண் சவதி 'துண்டு'


ADDED : ஜூன் 17, 2025 08:12 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ''அரசியலில் யாரும் சன்னியாசிகள் அல்ல. எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், சிறப்பாக பணியாற்றுவேன்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி தெரிவித்தார்.

பெங்களூரின் விதான் சவுதாவில், நேற்று அவர் அளித்த பேட்டி:

அரசியலில் யாரும் சன்னியாசிகள் அல்ல. என்னால் காங்கிரஸ் லாபம் அடைந்துள்ளது.கட்சியால் நானும் லாபம் அடைந்தேன். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுமா என்பது, எனக்கு தெரியாது. முதல்வரிடம் கேளுங்கள்.

அரசியலில் எதிர்பார்ப்புகள் இருக்கும். அமைச்சராக வேண்டும், முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கும் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. பதவி வழங்கினால் திறமையாக பணியாற்றுவேன்.

காங்கிரஸ், என்னை பயன்படுத்த வேண்டும் என, கேட்டுக் கொள்வேன். நவம்பரில் முதல்வர் சித்தராமையா, பதவியில் இருந்து இறங்குவார் என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறுகிறார். அவரை சில நாட்கள் பபலாதி மடத்தில் விடுகிறோம்.

அங்கு ஆரூடம் கற்றுக் கொள்ளட்டும். அங்கு அசோக்குக்கு உபதேசம் செய்ய வைத்து, தத்துவ ஞானியாக்குவோம். அதன்பின் ஆரூடம் கூறட்டும்.

முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் ராஜினாமா கேட்பது, பா.ஜ.,வினருக்கு வாய்ப்பாடம் ஆகிவிட்டது. நல்ல எதிர்க்கட்சியாக செயல்படவில்லை.

அனைத்து விஷயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாங்கள் கிழக்கு என்றால், அவர்கள் மேற்கு என்பர். நாங்கள் தெற்கு என்றால், அவர்கள் வடக்கு என்பர்.

குழந்தைகள் வாய்ப்பாடு கூறுவதை போன்று, எதிர்க்கட்சியினர் ராஜினாமா கேட்கின்றனர். இரவு உறக்கத்திலும் இதையே உளறுகின்றனர்.

சின்னசாமி விளையாட்டு அரங்கில், கூட்ட நெரிசல் அசம்பாவிதத்தில், தவறு நடக்கவில்லை என, நாங்கள் கூறவில்லை. எதிர்பாராமல் நடந்துவிட்டது.

அவ்வளவு மக்கள் சேருவார்கள் என, யாரும் ஊகிக்கவில்லை. 18 ஆண்டுகளுக்கு பின், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், வெற்றி கோப்பை கிடைத்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனவே கொண்டாட வேண்டும் என, மக்கள் ஒன்று சேர்ந்தனர்.

ஒரே நேரத்தில் இவ்வளவு மக்கள் குவிந்ததால், அசம்பாவிதம் ஏற்பட்டது. இது எதிர்பாராத சம்பவம். இதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் ராஜினாமா கேட்பது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us