/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மிதக்கின்றன வட மாவட்டங்கள்; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; மூழ்கிய விளைநிலங்கள்
/
மிதக்கின்றன வட மாவட்டங்கள்; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; மூழ்கிய விளைநிலங்கள்
மிதக்கின்றன வட மாவட்டங்கள்; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; மூழ்கிய விளைநிலங்கள்
மிதக்கின்றன வட மாவட்டங்கள்; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; மூழ்கிய விளைநிலங்கள்
ADDED : ஆக 20, 2025 07:56 AM

பெங்களூரு: கர்நாடகாவின் வடமாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஒடிஷாவின் தெற்கு கடற்கரை பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால், கர்நாடகாவின் வடமாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்கிறது.
இதன் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதுடன், நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மழையால் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ராட்சத பாறை ஹாசன் சக்லேஸ்பூர் டவுன், ஷிராடிகாட் பகுதியில் பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சக்லேஸ்பூரில் இருந்து மங்களூரு செல்லும் வெளிவட்ட சாலையில், நேற்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் உருண்டு சாலை நடுவில் விழுந்தன.
அதிர் ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனம் எதுவும் செல்லாதால், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சாலையில் விழுந்த பாறைகள், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதி உச்சியில், இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வீடுகளில் வசித்தவர்கள் காலி செய்துவிட்டனர். அந்த வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
ஹாவேரியின் ஹனகல்லில் நேற்று பெய்த மழையால், கவுரவம்மா என்பவர் வீடு இடிந்து விழுந்தது. லேசான காயத்துடன் கவுரவம்மா உயிர் தப்பினார். வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
நாட்டு படகு உத்தர கன்னடாவின் கார்வார் பகுதியில் நேற்று, கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. கரையில் இருந்து நாட்டுப் படகில், மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். கரையில் இருந்து சில நாட்டிக்கல் மைல் துாரமே சென்ற நிலையில், ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது.
ஏற்கனவே மீன்பிடித்து கரைக்கு வந்து கொண்டிருந்தவர்கள், மூன்று மீனவர்களையும் மீட்டனர். கவிழ்ந்த படகை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.
நிலச்சரிவு சிக்கமகளூரின் மூடிகெரே, பனகல், என்.ஆர்.புரா, சிருங்கேரி பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. மூடிகெரே கெம்மனகுந்தியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சிருங்கேரி தெக்கூர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், சிருங்கேரி - குடகு இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. சிரிமனே நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தரைப்பாலத்துக்கு பூஜை பெலகாவியில் கனமழைக்கு கட்டபிரபா அணைக்கு நீ ர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 17,435 கனஅடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. ஆற்றின் நடுவில் இருக்கும் தரைப்பாலம் மூழ்கியதால், மல்லிகாவாட் - தத்தவாட் கிராமங்களுக்கு இடையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த பாலம் மூன்று முறை மூழ்கியதால், பாலத்திற்கு எதுவும் ஆகாமல் இருக்க பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
கோவிலை சூழ்ந்த வெள்ளம் பீதர் மாவட்டத்தில் பெய்யும் மழையால், பால்கி தாலுகாவில் உள்ள காரஞ்சா அணை நிரம்பி உள்ளது. அந்த அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், காரஞ்சா ஆற் றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றங்கரையோரம் உள்ள சிவன் கோவிலை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. துாரத்தில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மூழ்கும் பாலம் கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து வினாடிக்கு 91,330 கனஅடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, 133 ஆண்டு பழமையான, வெல்லஸ்லி பாலம் மூழ்கும் நிலையில் உள்ளது.
அந்த பாலத்தின் அருகில் யாரும் செல்லாமல் தடுக்க, இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீரங்கப்பட்டணா காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில், தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புராதன சின்னங்கள் கொப்பால் முனிராபாத்தில் உள்ள துங்கபத்ரா அணையில் இருந்து, வினாடிக்கு 1,17,057 கன அடி தண்ணீர் திறப்பதால், துங்கபத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கம்ப்ளி - பல்லாரியை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. ஹம்பியில் உள்ள புராதன சின்னங்கள் மூழ்கியதுடன், ஆற்றின் நடுவில் இருக்கும் மண்டபமும் மூழ்கி உள்ளது.
விளைநிலங்கள் பெலகாவி, கதக், பல்லாரி, ராய்ச் சூர், கொப்பால் உள்ளிட்ட வடமாவட்ட ங்களில் கனமழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம், மழைநீர் புகுந்ததால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டன.
rain 1 _ rain 10 rain 2 rain 3 _ rain 12 rain 4 rain 5 rain 6 rain 7 rain 9 rain 11