/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இந்திய முறைப்படி நார்வே ஜோடி திருமணம்
/
இந்திய முறைப்படி நார்வே ஜோடி திருமணம்
ADDED : நவ 27, 2025 07:37 AM

கார்வார்: கோகர்ணா கடற்கரை பகுதியில் உள்ள ரிசார்ட்டில், இந்திய முறைப்படி நார்வே ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
ஐரோப்பா கண்டத்தின் நார்வே நாட்டை சேர்ந்தவர்கள் சாம் - ஆர்டெமி காதல் ஜோடி. இவர்கள் பல முறை இந்தியாவுக்கு சுற்றுலா வந்து உள்ளனர். இந்தியாவின் கலாசாரம் பிடித்து போனதால், தங்கள் திருமணத்தை இந்திய முறைப்படி நடத்த முடிவு செய்தனர்.
கடந்த ஆண்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்தனர். விசா பிரச்னையால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இம்முறை விசா கிடைத்ததால், உத்தர கன்னடாவின் கோகர்ணா கடற்கரை பகுதியில் உள்ள ரிசார்ட்டில், நேற்று முன்தினம் இந்திய முறைப்படி திருமணம் செய்தனர்.
சாம் பட்டு குர்தாவும், வேஷ்டியும்; ஆர்டெமி லெகங்காவும் அணிந்திருந்தனர். வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

