ADDED : ஜூலை 15, 2026 12:35 AM
பெங்களூரு: 'பள்ளிகளுக்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் செயற்கை ரசாயனம் சேர்க்கப்பட்டால், கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
இது குறித்து, நேற்று அவர்கள் கூறியதாவது:
உடல் பருமன், அதிக கொழுப்பு, கல்லீரலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அவர்கள் சாப்பிடக்கூடிய துரித உணவுகளே முக்கிய காரணமாகும்.
எனவே, பெங்களூரிலுள்ள பல பள்ளிகளுக்கு அருகிலுள்ள, 100க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் கடந்த சில நாட்களாக சோதனை செய்யப்பட்டன. உணவு பொருட்களின் மா திரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன.
உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கை ரசாயனம் சேர்ப்பது கண்டறியப்பட்டால், கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
