/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பழைய வாகனங்கள் அதிரடி பறிமுதல்
/
பழைய வாகனங்கள் அதிரடி பறிமுதல்
ADDED : நவ 25, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் பழைய வாகனங்களை ஏ.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கவயல், பங்கார்பேட்டை, மாலுார் ஆகிய மூன்று தாலுகாக்களுக்கான உதவி ஆர்.டி.ஓ., அலுவலகம் தங்கவயலில் இயங்கி வருகிறது.
இதன் அதிகாரிகள், நேற்று தங்கவயலில் 15 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பழைய வாகனங்கள், இன்சூரன்ஸ் எடுக்காத வாகனங்களை சோதனை நடத்தினர். 20 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
குறிப்பாக பள்ளி வேன்கள், பஸ்கள், கிரேன்களை பறிமுதல் செய்தனர். 'இந்த நடவடிக்கை மேலும் தொடரும்' என்று உதவி ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

