தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ யாருக்கு 'சீட் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்

 யாருக்கு 'சீட் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்

 யாருக்கு 'சீட் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்


ADDED : மார் 18, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே:''தாவணகெரே தெற்கு தொகுதியில் யாருக்கு சீட் கிடைக்கும், யார் வெற்றி பெறுவர் என்பது கடவுளுக்கு தான் தெரியும்,'' என, சுரங்கத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் தெரிவித்தார்.

தாவணகெரே தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா மறைவுக்கு பின், அத்தொகுதிக்கு ஏப்., 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் முஸ்லிம் ஓட்டுகள் அதிகளவில் இருப்பதால், இம்முறை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று, அந்த சமூகத்தினர் காங்கிரசை வற்புறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ஏற்கனவே சாமனுார் சிவங்கரப்பா மகனும், அமைச்சருமான மல்லிகார்ஜுன், வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் இடையே வாக்குவாதம் நடந்து வருகிறது.

அதேவேளையில், இத்தொகுதியில் தன் மகன் சமர்த்துக்கு அமைச்சர் மல்லிகார்ஜுன் சீட் கேட்டு வருவதாகவும் கூறப் படுகிறது.

இதுதொடர்பாக அமைச்சர் மல்லிகார்ஜுன் கூறியதாவது:

இடைத்தேர்தலில் யாருக்கு சீட் கிடைக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்பது கடவுளுக்கு தான் தெரியும். கட்சி தலைமை யாருக்கு சீட் வழங்குகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேற்பார்வை கமிட்டியினர், தொகுதிக்கு வந்து கட்சி தொண்டர்களின் கருத்துக்களை கேட்க உள்ளனர். வெற்றி பெறும் தகுதி வாய்ந்த வேட்பாளருக்கு சீட் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

அவர் சிறுபான்மையராகவோ அல்லது ஹிந்து அல்லாதவராகவோ அல்லது மற்ற சமுதாயத்தை சேர்ந்தவராகவோ இருக்கலாம்.

'முஸ்லிம்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், பின்னர் நாங்கள் முடிவு செய்வோம்' என்று காங்கிரஸ் பிரமுகர் அப்துல் ஜப்பார் கூறியது குறித்து பேச விரும்பவில்லை.

அவரின் கடந்த காலம் பற்றியும், இப்போது எப்படி இருக்கிறார் என்பது பற்றியும் நன்றாக தெரியும். காங்கிரஸ் கட்சி இக்கட்டாண சூழ்நிலையில் இருந்த போது உடன் இருந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும், கட்சி மாறி வருவோரின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இத்தொகுதியில் முஸ்லிம்களுக்கு சீட் தர வேண்டும் என்று பா.ஜ., கூறி வருவது ஆச்சர்யமாக உள்ளது. அவர்கள் இருவருக்குள் என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

இடைத்தேர்தலில் என் மகன் சமர்த்திற்கு சீட் கொடுக்க வேண்டும் என்று, அவர் மீது அன்பு வைத்திருப்பவர்கள் கூறி வருகின்றனர். யாருக்கு சீட் தர வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். இதுபோன்று பாகல்கோட்டில் மறைந்த எம்.எல்.ஏ., மேட்டியின் குடும்ப உறுப்பினருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று கூட ஆதரவு பெருகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us