/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஆப்பரேஷன் சிந்துார் டாட்டூ' இளைய தலைமுறையினர் ஆர்வம்
/
'ஆப்பரேஷன் சிந்துார் டாட்டூ' இளைய தலைமுறையினர் ஆர்வம்
'ஆப்பரேஷன் சிந்துார் டாட்டூ' இளைய தலைமுறையினர் ஆர்வம்
'ஆப்பரேஷன் சிந்துார் டாட்டூ' இளைய தலைமுறையினர் ஆர்வம்
ADDED : மே 14, 2025 11:12 PM

பெங்களூரு: இந்திய ராணுவம் நடத்திய 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் 'டாட்டூ' போடுவதற்கு இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை நம் நாடு மேற்கொண்டு வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து பெங்களூரு ரூரல் மாவட்டம், ஹொஸ்கோட்டில், 'ஆப்பரேஷன் சிந்துார் டாட்டூ' டிரென்டாகியுள்ளது. இளைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்டோர், தங்களின் கைகள், தோள் பட்டை மீது 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் 'டாட்டூ' போடுகின்றனர்.
நம் நாட்டினர் மட்டுமின்றி, இந்திய ராணுவத்தினரை கவுரவிக்கும் வகையில், இஸ்ரேலியர்கள் உட்பட, வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் கூட, தங்களின் தோள் மீது 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் 'டாட்டூ' போட்டுக் கொள்கின்றனர்.
சிலர் தற்காலிகமாகவும் சிலர் நிரந்தரமாகவும் 'ஆப்பரேஷன் சிந்துார் டாட்டூ' போட்டுக் கொள்கின்றனர்.
'நம் நாட்டை கவுரவிக்கும் வகையில், எங்களின் கைகளில் நிரந்தரமாக இருக்க வேண்டும்' என, பலரும் பெருமையுடன் மெய்சிலிர்க்கக் கூறுகின்றனர்.
'ஆப்பரேஷன் சிந்துார்' என, பச்சை குத்திக் கொண்ட இளைஞர் ரவி கூறியதாவது:
'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம், இந்திய ராணுவம் தன் சக்தியை, உலகுக்கே காட்டியது. ஒரு இந்தியனாக, ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்.
'ஆப்பரேஷன் சிந்துார்' என, பச்சை குத்திக் கொள்ளும்போது, என் உடல் புல்லரித்தது. இது நிரந்தரமாக என்னுடன் இருக்கும்.
இஸ்ரேலை சேர்ந்த என் நண்பருக்கு, 'சிந்துார்' என்ற வார்த்தையின் மகத்துவம், கலாசாரம் குறித்து விவரித்தேன். இதனால் கவரப்பட்ட அவரும், பச்சை குத்திக் கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.