/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுகாதார துறைக்கு உடல்நல குறைவு எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிண்டல்
/
சுகாதார துறைக்கு உடல்நல குறைவு எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிண்டல்
சுகாதார துறைக்கு உடல்நல குறைவு எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிண்டல்
சுகாதார துறைக்கு உடல்நல குறைவு எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிண்டல்
ADDED : டிச 23, 2025 06:51 AM

பெங்களூரு: ''சுகாதார அமைச்சராக தினேஷ் குண்டுராவ் பொறுப்பு ஏற்றதில் இருந்து, அந்த துறை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளது,'' என்று எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிண்டல் செய்து உள்ளார்.
இதுகுறித்து அவரது 'எக்ஸ்' வலைதள பதிவு:
காங்கிரஸ் மேலிடம் கூறும் வரை நானே முதல்வர் என்று சித்தராமையா திரும்ப, திரும்ப கூறுகிறார். மறுபுறம் எனக்கும், முதல்வருக்கும் இடையில் ஒப்பந்தம் இருப்பதாக கூறும் துணை முதல்வர் சிவகுமார், கோவில், கோவிலாக சுற்ற ஆரம்பித்து உள்ளார்.
முதல்வர் பதவிக்காக மாநில அளவில் உருவாக்கப்பட்ட குழப்பத்தை நீங்களே தீர்த்து கொள்ளுங்கள்; மேலிடம் பெயரை பயன்படுத்தாதீர்கள் என்று கூறி, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நழுவி விட்டார்.
தட்சிண கன்னடாவின் கொல்லமோக்ரு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் டாக்டராக வேலை செய்த குல்தீப், ஆறு மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் பதவியை ராஜினாமா செய்து உள்ளது. காங்கிரஸ் அரசு எவ்வளவு திவாலாகி உள்ளது என்பதற்கு இது புதிய எடுத்துக்காட்டு.
கிராம பகுதியில் பணியாற்ற டாக்டர்கள் கிடைப்பதே கடினம். இதுபோன்ற சூழ்நிலையில் அங்கு பணியாற்றும் டாக்டர்களுக்கு சம்பளம் கொடுக்காமல், ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டால், கிராமபுற மக்கள் சிகிச்சை பெற எங்கு செல்ல முடியும்.
தினேஷ் குண்டுராவ் சுகாதார துறை அமைச்சர் ஆனதில் இருந்து, அந்த துறை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளது. இரவு விருந்துகளுக்கு சென்றே அவர் நேரத்தை கடத்துகிறார்.
இவ்வாறு அசோக் பதிவிட்டு உள்ளார்.

