தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பஸ் பயண கட்டண உயர்வு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

பஸ் பயண கட்டண உயர்வு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

பஸ் பயண கட்டண உயர்வு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்


UPDATED : நவ 05, 2026 12:00 AM

ADDED : நவ 04, 2026 10:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 12:00 AM ADDED : நவ 04, 2026 10:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘ ‘ தீபாவளி நேரத்தில், பஸ் கட்டணத்தை உயர்த்தி, மக்களுக்கு மாநில அரசு பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது, ’ என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

துக்ளக் அரசை விட, காங்கிரஸ் அரசு மோசமானதாக உள்ளது. மாநிலத்தின் வரலாற்றில் முதன் முறையாக, இந்த அளவுக்கு பஸ் பயண கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதற்கு முன் எந்த அரசும் இப்படி உயர்த்தியது இல்லை. தீபாவளி பண்டிகை நேரத்தில், மக்களை அரசு இருளில் தள்ளியுள்ளது.

மெஜஸ்டிக்கில் இருந்து, சிவாஜி நகருக்கு பி.எம்.டி.சி., பஸ்சில் பயணிக்க 12 ரூபாய் கட்டணம் இருந்தது. இப்போது 18 ரூபாயாக அதிகரித்துள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து யஷ்வந்த்பூருக்கு 18 ரூபாயாக இருந்த கட்டணம், இப்போது 25 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அனைத்து இடங்களின் பயண கட்டணமும் அதிகரித்துள்ளது.

பஸ் கட்டண உயர்வுக்கு, ஒரு காரணம் இருக்க வேண்டும். போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இருப்பதால், கட்டணத்தை உயர்த்துவதாக, அமைச்சர் பைரதி சுரேஷ் கூறுகிறார்.

நான் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து கழகங்கள் லாபத் தில் இருந்தன. இவற்றின் சொந்த பணத்தால், 1,110 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. இப்போது அந்த நிலத்தின் மதிப்பு, 10,000 கோடி ரூபாயாகும். பஸ் டெர்மினல் கட்டினேன்.

இன்றைய காங்கிரஸ் அரசு, நான்கு போக்குவரத்து கழகங்களுக்கு, 5,650.95 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இந்த பணத்தை கொடுத்திருந்தால், பயண கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

பாலின் ஊக்கத்தொகையை, ஏழு ரூபாயாக அதிகரிப்பதாக உறுதியளித்த காங்கிரஸ், அதன்பின் அதை மறந்துவிட்டு, மக்களின் மீது சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு லிட்டர் பாலுக்கு எட்டு ரூபாய் அதிகரிப்பதாக கூறப்பட்டது. ஆனால், 12 ரூபாயை உயர்த்தியுள்ளனர். ஒரு லிட்டர் தயிருக்கு 25 ரூபாய் அதிகரித்துள்ளனர். தினமும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை, தவிர்த்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us