தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உத்தரவாத திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

 உத்தரவாத திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

 உத்தரவாத திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்


ADDED : ஆக 16, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'உத்தரவாத திட்டங்களுக்கு செலவான தொகை, பயனாளர்களின் எண்ணிக்கை குறித்து காங்கிரஸ் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கோரிக்கை வைத்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சுதந்திர தின விழாவில் உத்தரவாத திட்டங்கள் குறித்த தவறான புள்ளிவிபரங்களை முதல்வர் சிவகுமார் வழங்கினார். சுதந்திர தினத்தன்று மக்களிடம் உண்மையை பேச வேண்டும். பொய் பேசக்கூடாது.

காங்கிரஸ் அரசுக்கு சாதகமான புள்ளி விபரங்களை பொது நிகழ்வில் பேசுவது சரியல்ல. மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவது தவறான செயல்.

பெண்களுக்கு மாதம், 2,000 ரூபாய் வழங்கும் 'கிரஹலட்சுமி' திட்டத்தில் பல குளறுபடிகள் நடக்கின்றன. இதை ஒப்புக்கொள்ளும் வகையிலேயே முதல்வர் சிவகுமாரின் உரை இருந்தது.

எனவே, உத்தரவாத திட்டங்களுக்கு செலவான தொகை, பயனாளிகள் விபரங்கள் குறித்து முழுமையான விவரங்களை வெள்ளை அறிக்கையாக மாநில அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us