/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டசபை சிறப்பு கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு
/
சட்டசபை சிறப்பு கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு
சட்டசபை சிறப்பு கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு
சட்டசபை சிறப்பு கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு
ADDED : ஜன 11, 2026 05:48 AM

பெங்களூரு: விக்சித் பாரத் ஜி ராம் ஜிசட்டம் குறித்து விவாதிக்க, சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரை நடத்தும் அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் வரவேற்று உள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை, விபி ஜி ராம் ஜி என்று மத்திய அரசு மாற்றம் செய்து உள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த எம்.எல்.ஏ. க்கள் கூட்டத்தில், ஜி ராம் ஜி சட்டம் குறித்து விவாதிக்க, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டாக இதுகுறித்து, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆகியோர் நேற்று கூட்டாக அளித்த பேட்டி:
ஜி ராம் ஜி சட்டம் குறித்து விவாதிக்க, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்துள்ள அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த சட்டம் குறித்து மக்கள் மத்தியில் தவறான தகவலை காங்கிரஸ் பரப்புகிறது. சிறப்பு சட்டசபை கூட்டத்தில், சட்டத்தின் உண்மையான தன்மை பற்றி நாங்கள் எடுத்துச் சொல்வோம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம், நாட்டிற்கு காங்கிரஸ் என்ன செய்தது; பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த, 11 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு செய்தது என்ன என்பதை எடுத்துச் சொல்வோம்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் போது, அதில் முறைகேடுகள் ஏற்படாமல் பார்த் துக் கொண்டவர் பிரதமர் மோடி. தேசிய ஜனநாய க கூ ட்டணி ஆட்சியில், 7 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பிரதமர் விருப்பம் கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் வகையில், இந்தத் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர பிரதமர் விரும்புகிறார். மக்கள் சார்பான திட்டங்களை காங்கிரஸ் ஒருபோதும் நம்புவதில்லை.
அதனால் தான், இந்தியாவா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு தாமதம் ஏற்பட்டது. வெளிப்படை தன்மை, நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. வேலை நாட்களின் எண்ணிக்கை, 100ல் இருந்து 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு பதில் அளித்த சித்தராமையா, ''சட்டசபையில் எதிர்க்கட்சிகளுடன் விவாதம் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். தேவைப்பட்டால் பெரிய போராட்டமும் நடத்துவோம். கூடிய விரைவில் சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடத்தப்படும்,''என்றார்.
குமாரசாமி அளித்த பேட்டி:
' விக்சித் பாரத் ஜி ராம் ஜி' எனப்படும், வளர்ந்த பாரதம் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம் விஷயத்தில், காங்கிரஸ் பொய்யான கட்டுக்கதைகளை கூறுகிறது. இந்த பொய்யை எதிர்க்கொள்ள, நாங்கள் ஆவணங்களுடன் தயாராக இருக்கிறோம். பகிரங்க விவாதத்துக்கு வரட்டும்.
காங்கிரசாரின் பொய்களை மக்கள் நம்பும் காலம், மலையேறி விட்டது. நாட்டில் நீண்ட காலம் ஆட்சி நடத்திய காங்கிரஸ், எந்த திட்டத்துக்காவது, மகாத்மா காந் தியின் பெயரை வைத்துள்ளதா; அனைத்து திட்டங்களுக்கும், நேரு குடும்பத்தின் உறுப்பினர்கள் பெயரை வைத்து, காந்திக்கு துரோகம் செய்தனர். காங்கிரசாருக்கு காந்தியின் பெயரை கூறும் அருகதை இல்லை.
ஜி ராம் ஜி திட்டம் குறித்து, அவது ாறு பிரசாரம் செய்வதுடன், பாதயாத்திரை நடத்துகிறார்களாம். என்ன காரணத்துக்காக அதை செய்கின்றனர்.
நரேகா திட்டத்தின் பெயரில், போலியான பில்களை உருவாக்கி, கொள்ளையடித்தது போதாதா; காங்கிரசாரால் ஏழை கூலி தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைத்ததா. கூலியாட்களுக்கு நியாயம் கிடைக்க செய்யாமல், காங்கிரஸ் வேறு என்ன செய்கின்றனர்.
போலியான பில்களை தடுக்கவும், போலியான பணி கார்டுகளை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன். நரேகா திட்டம் நிறுத்தப்படவில்லை. பல ஆண்டுகளாக திட்டத்தில் நடந்த குளறுபடிகளை, பிரதமர் நரேந்திர மோடி அரசு சரி செய்து, சிறப்பாக செயல்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

