தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சுப்ரபாதம் பாடலுக்கு எதிர்ப்பு; 2 சமூகத்தினர் வாக்குவாதம்

சுப்ரபாதம் பாடலுக்கு எதிர்ப்பு; 2 சமூகத்தினர் வாக்குவாதம்

சுப்ரபாதம் பாடலுக்கு எதிர்ப்பு; 2 சமூகத்தினர் வாக்குவாதம்


ADDED : பிப் 04, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொட்டபல்லாபூர்: தொட்டபல்லாபூரில் சனீஸ்வரர் கோவிலில் சுப்ரபாதம் பாடல் பாடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் நபரால், பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூரின் சாந்தி நகரில் சனீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இங்கு தினமும் அதிகாலை ஒலிபெருக்கி மூலம் சுப்ரபாதம் ஒலிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இதேபோன்று சுப்ரபாதம் ஒலித்தது.

அப் போது, கோவிலில் இருந்து இரண்டு மூன்று வீடுகள் தள்ளி வசிக்கும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த வாலிபர், 'கோவில் அருகில், என் தாயார் உறங்கிக் கொண்டிருக்கிறார். எனவே, ஒலிபெருக்கி சத்தத்தை குறையுங்கள் அல்லது அணைத்து விடுங்கள்' என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

இதனால் கோபம் அடைந்த அங்கிருந்து ஹிந்துக்கள், 'இதுபோன்று நாங்களும் கூறலாமா' என்று கேட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக கோவில் அர்ச்சகர், தொட்டபல்லாபூர் நகர போலீசில் புகார் அளித்தார். அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ததுடன், 'இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது' என்று எச்சரித்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us