/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
/
3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஜூலை 23, 2025 07:57 AM

மைசூரு: மைசூரு மீனாட்சிபுரம் கே.ஆர்.எஸ்., நீர்தேக்க பகுதியில் 3 நர்சிங் மாணவர்கள் இறந்ததை அடுத்து, அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதை பார்ப்பதற்காக தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். இம்மாதம் 20ம் தேதி மாண்டியாவை சேர்ந்த மூன்று நர்சிங் மாணவர்கள், மைசூரின் லட்சுமிபுரத்தில் கே.ஆர்.எஸ்., அணையின் நீர்த்தேக்க பகுதியில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலியாகினர்.
இதையடுத்து, மாவட்ட பொறுப்பு அதிகாரி செல்வகுமார், மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி உட்பட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அங்கு நடந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அறிந்த அதிகாரிகள், எல்வால் எஸ்.ஐ., மகேந்திராவை அழைத்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார். அறிக்கை கிடைத்தவுடன், விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்றனர்.
அத்துடன், மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த பகுதியில், குளிக்கவோ, மது அருந்தவோ, அநாகரீகமாக நடந்து கொள்ளவோ கூடாது என்று ஆனந்துார் கிராம பஞ்சாயத்து சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.