/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெஜஸ்டிக் அருகே நடமாடும் கழிப்பறைகள் ஏற்படுத்த உத்தரவு
/
மெஜஸ்டிக் அருகே நடமாடும் கழிப்பறைகள் ஏற்படுத்த உத்தரவு
மெஜஸ்டிக் அருகே நடமாடும் கழிப்பறைகள் ஏற்படுத்த உத்தரவு
மெஜஸ்டிக் அருகே நடமாடும் கழிப்பறைகள் ஏற்படுத்த உத்தரவு
ADDED : செப் 07, 2025 02:26 AM

பெங்களூரு: “மெஜஸ்டிக் அருகில் நடமாடும் கழிப்பறைகள் ஏற்பாடு செய்யுங்கள்,” என, அதிகாரிகளுக்கு, மத்திய மண்டல மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு நகரின் இதய பகுதியாக மெஜஸ்டிக் உள்ளது. இங்கிருந்து கர்நாடகாவின் பிற மாவட்டங்களுக்கும், ஆந்திரா, தெலுங்கானாவுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆம்னி பஸ்களும் இங்கிருந்து புறப்படுகின்றன. சிட்டி ரயில் நிலையமும் உள்ளதால் மெஜஸ்டிக் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இரவு நேரத்தில் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள நடைபாதைகளில், இரவு நேரத்தில் நடந்து செல்வோர் அவசரத்திற்கு இயற்கை உபாதையை கழிக்கின்றனர். இதனால் நடைபாதை அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் மத்திய மண்டல மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன், மெஜஸ்டிக் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார்.
“நடைபாதைகளின் இயற்கை உபாதை கழிப்பதை தடுக்க, மெஜஸ்டிக் அருகில் நடமாடும் கழிப்பறைகளை ஏற்பாடு செய்யுங்கள்,” என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின், தன்வந்திரி சாலையில் உள்ள குப்பை யார்டில் ஆய்வு செய்து, குப்பையை சேகரிக்கும் ஆட்டோ டிரைவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு வேலை செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.
மெஜஸ்டிக்கை சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யுங்கள் என்று, துாய்மை பணியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது, தலைமை இன்ஜினியர் விஜய்குமார் ஹரிதாசும் உடன் இருந்தார்.