/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எத்னால் நீக்கத்தால் பா.ஜ., மீது பஞ்சமசாலி சமூகம் கோபம்
/
எத்னால் நீக்கத்தால் பா.ஜ., மீது பஞ்சமசாலி சமூகம் கோபம்
எத்னால் நீக்கத்தால் பா.ஜ., மீது பஞ்சமசாலி சமூகம் கோபம்
எத்னால் நீக்கத்தால் பா.ஜ., மீது பஞ்சமசாலி சமூகம் கோபம்
ADDED : மார் 29, 2025 06:54 AM

பெங்களூரு : கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஐதராபாதில் இருந்து விமானம் மூலம், நேற்று மதியம் எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் பெங்களூரு வந்தார்.
அங்கிருந்து காரில் நேராக, முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர் வீட்டிற்கு சென்றார். எத்னால் அணியின் முன்னாள் அமைச்சர்கள் குமார் பங்காரப்பா, ரமேஷ் ஜார்கிஹோளி, முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா ஆகியோர் அங்கு வந்தனர். எத்னாலுக்கு ஆதரவு கூறினர்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உத்தரவை வாபஸ் பெறும்படி, மேலிடத்தை வலியுறுத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அது நடக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பது குறித்தும் விவாதித்துள்ளனர்.
இதற்கிடையில் “பசனகவுடா பாட்டீல் எத்னால் தனி கட்சி ஆரம்பித்தால் ஆதரவு தருவேன்,” என, மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமியும் அறிவித்துள்ளார். பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது 2ஏ இடஒதுக்கீடு கிடைக்காததால், 2023 தேர்தலில் பா.ஜ.,வை பஞ்சமசாலி சமூகத்தினர் புறக்கணித்தனர்.
இப்போது எத்னால் நீக்கத்தால் பா.ஜ., மீதான கோபம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.