/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருத்துவர்கள் பற்றாக்குறை நோயாளிகள் அவதி மருத்துவர்கள் பற்றாக்குறை நோயாளிகள் அவதி

ADDED : ஜூலை 02, 2025 07:32 AM
பெங்களூரு :விக்டோரியா, பவுரிங் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
பெங்களூரில் உள்ள விக்டோரியா, பவுரிங் அரசு மருத்துவமனைகளுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வருகின்றனர். இந்த இரண்டு மருத்துவமனைகளிலும் 40 சதவீதம் மருத்துவர்கள், ஊழியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இருப்பினும், மருத்துவ கல்வித்துறை, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், ஊழியர்கள் உள்ளிட்ட பல பதவிகளுக்கு 11,147 காலிப் பணியிடங்கள் உள்ளன.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் 3,005 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
கடந்த ஒரு ஆண்டாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதன் விளைவாக, பவுரிங், விக்டோரியா உட்பட பல மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.