/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
/
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ADDED : ஆக 10, 2025 02:55 AM

ஹலசூரு : ஹலசூரு ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு, நேற்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி நேற்று திருவள்ளுவர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து வணங்கினர்.
பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் கோ.தாமோதரன், செயற்குழு உறுப்பினர்கள் அமுதபாண்டியன், சண்முகம், கோபிநாத், முன்னாள் தலைவர்கள் தி.கோ.தாமோதரன், இராசு மாறன், முன்னாள் செயலர்கள் ராமசுப்பிரமணியன், ஸ்ரீதர்; பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான எஸ்.டி.குமார்,
விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவர் பையப்பனஹள்ளி ரமேஷ், உரிமைக்குரல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., நலிவுற்றோர் அறக்கட்டளை நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர்., ரவி, ஆலோசகர் பாஸ்கரன் யோகா குருஜி, கர்நாடக மாநில தி.மு.க., பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி, சரவணா, கோபி, தன் உரிமை மனமகிழ் மன்ற பொதுச் செயலர் ராஜசேகர், கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு தலைவர் செந்தில் குமார் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
எஸ்.டி.குமார் சார்பில் இனிப்பு, தண்ணீர் வழங்கப்பட்டது.

