UPDATED : அக் 30, 2026 12:00 AM
ADDED : அக் 29, 2026 10:57 PM
பெங்களூரு: பெங்களூரு மாவட்ட கால்பந்து சங்க தலைவர் பாலுவை ‘சஸ்பெண்ட்’ செய்து உள்ளதாக, கர்நாடக மாநில கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கர்நாடக மாநில கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பாலு, செயலர் ஸ்ரீதரன், பொருளாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் மீது நிறைய புகார்கள் வந்தன.
குறிப்பாக, விளம்பரங்களை கையாளுவது, போட்டிகளை நேரலையில் ஒளிபரப்புவதில் அஜாக்கிரதையாக இருந்ததாக புகார்கள் வந்தன. இதனால், இவர்கள் மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
இதனால், நவம்பர் 1ம் தேதி நடக்கவுள்ள பெங்களூரு மாவட்ட கால்பந்து பொதுக்கூட்டத்தில், மூவரும் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது.
இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். விசாரணையின் முடிவிலேயே எடுக்கப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும். அதுவரை மூவரும் எவ்வித பணியிலும் ஈடுபட மாட்டார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
